முகப்பு /திருநெல்வேலி /

நெல்லை - மேட்டுப்பாளையம் ரயில் இனி கிணத்துக்கடவு ரயில் நிலையத்தில் நின்று செல்லும்!

நெல்லை - மேட்டுப்பாளையம் ரயில் இனி கிணத்துக்கடவு ரயில் நிலையத்தில் நின்று செல்லும்!

மாதிரி படம்

மாதிரி படம்

Nellai Mettupalayam Train : நெல்லை - மேட்டுப்பாளையம் கோடை கால சிறப்பு ரயில் கிணத்துக்கடவு ரயில் நிலையத்தில் நின்று செல்லும் என அறிவிப்பு வெளியாகி உள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tirunelveli, India

மேட்டுப்பாளையத்தில் இருந்து பொள்ளாச்சி வழியாக நெல்லைக்கு இயக்கப்பட்ட வாரந்திர சிறப்பு ரயில் பொங்கல் பண்டிகைக்கு பிறகு நிறுத்தப்பட்டது. தற்போது வாரந்திர கோடை கால சிறப்பு ரயிலாக வரும் ஏப்ரல் மாதம் முதல் இயக்கப்படுகிறது. இந்த ரயில் ஏப்ரல் மாதம் 6ம் தேதி முதல் ஜூன் மாதம் 29ம் தேதி ஒவ்வொரு வியாழக்கிழமைகளில் நெல்லையில் இருந்து புறப்பட்டு மேட்டுப்பாளையத்திற்கு வருகிறது.

இதேபோன்று மறுமார்க்கத்தில் ஏப்ரல் மாதம் 7ம் தேதி முதல் ஜூன் மாதம் 30ம் தேதி வரை ஒவ்வொரு வெள்ளிக்கிழமைகளில் மேட்டுப்பாளையத்தில் இருந்து நெல்லைக்கு இயக்கப்படுகிறது. இதற்கான அறிவிப்பை தென்னக ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ளது. இந்த சிறப்பு ரயில் கிணத்துக்கடவு ரயில் நிலையத்தில் நின்று செல்லும் என்ற புதிய அறிவிப்பு இதில் வெளியாகி உள்ளது.

அதன்படி ஏப்ரல் மாதம் 6ம் தேதி நெல்லையில் இருந்து இரவு 7 மணிக்கு கிளம்பும் இந்த ரயில் அதிகாலை 4:45 மணிக்கு பொள்ளாச்சிக்கும், 5:09 கிணத்துக்கடவும், 6:03 போத்தனூரும், 7:30 மணிக்கு மேட்டுப்பாளையம் செல்லும். மறுநாள் வெள்ளிக்கிழமை இரவு 7:45 மணிக்கு மேட்டுப்பாளையத்தில் இருந்து நெல்லைக்கு கிளம்பும் இந்த ரயில் இரவு 8:53 மணிக்கு போத்தனூரும், 9:17 மணிக்கு கிணத்துக்கடவிற்கும், இரவு 10:03 மணிக்கு பொள்ளாச்சிக்கும், சனிக்கிழமை காலை 7:45 மணிக்கு நெல்லையை அடைகிறது.

First published:

Tags: Local News, Southern railway, Tirunelveli