முகப்பு /திருநெல்வேலி /

நெல்லையில் ஆண்களுக்கும் தனியாக வேலை வாய்ப்பு முகாம் நடத்த கோரிக்கை!

நெல்லையில் ஆண்களுக்கும் தனியாக வேலை வாய்ப்பு முகாம் நடத்த கோரிக்கை!

X
நெல்லை

நெல்லை வேலை வாய்ப்பு முகாம்

Nellai job fair | நெல்லையில் பெண்களுக்கு வேலை வாய்ப்பு முகாம் நடைபெறுவது போல் எங்களுக்கும் நடத்த வேண்டும் என ஆண்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

  • Last Updated :
  • Tirunelveli, India

திருநெல்வேலி மாவட்ட வேலைவாய்ப்பு தொழில் நெறி வழிகாட்டு மையம் சார்பில் பெண்களுக்கென மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் பாளையங்கோட்டை சாராள் தக்கர் மகளிர் கல்லூரியில் நடைபெற்றது.

கங்கைகொண்டான் சிப்காட் வளாகத்தில் அமைந்துள்ள டி.பி. சோலார் நிறுவனத்தின் வேலைவாய்ப்புக்காக பிரத்தியமாக நடத்தப்பட்டது. இந்த முகாமில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்களை தேர்வு செய்ததாக தெரிகிறது.

8 வயது முதல் 30 வயதிற்கு உட்பட்ட பத்தாம் வகுப்பு 12ஆம் வகுப்பு ஐடிஐ பாலிடெக்னிக் பி.இ. முடித்த பெண்கள் இந்த முகாமில் கலந்து கொண்டனர். தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் அடுத்த ஆறு முதல் பத்து மாதங்களில் படிப்படியாக பணியில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள். பணி நியமனம் பெறும் பதிவுதாரர்களுடைய வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவு மூப்பு ரத்து செய்யப்பட மாட்டாது எனவும் மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், ஆண்களுக்கும் இது போன்ற மாபெரும் வேலை வாய்ப்பு முகாமை மாவட்ட ஆட்சியர் நடத்துமாறு இளைஞர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

First published:

Tags: Job Fair, Local News, Tirunelveli