முகப்பு /திருநெல்வேலி /

நெல்லையில் போதைப்பொருட்கள் கடத்தல் குறித்த ஆய்வு கூட்டம்!

நெல்லையில் போதைப்பொருட்கள் கடத்தல் குறித்த ஆய்வு கூட்டம்!

நெல்லை ஆய்வு கூட்டம்

நெல்லை ஆய்வு கூட்டம்

Tirunelveli | நெல்லையில் நடைபெற்ற கூட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய 11 பேருக்கு நற்சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

  • Last Updated :
  • Tirunelveli, India

திருநெல்வேலியில் நடைபெற்ற போதைப்பொருட்கள் கடத்தல் குறித்த ஆய்வு கூட்டத்தில் ஏராளமான காவல்துறையினர் கலந்து கொண்டனர்.

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் துணை கண்காணிப்பாளர்கள் மற்றும் காவல் ஆய்வாளர்களுக்கான மாதாந்திர ஆய்வு கூட்டம்  மாவட்ட காவல் அலுவலகத்தில் வைத்து திருநெல்வேலி  மாவட்ட காவல்  கண்காணிப்பாளர் சிலம்பரசன்  தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில், மாவட்டத்தில் உள்ள அனைத்து வழக்குகளின் புலன் விசாரணை குறித்தும், நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்தும், கஞ்சா மற்றும் புகையிலை போன்ற போதைப்பொருட்கள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்வது குறித்தும், பொது அமைதிக்கு பங்கம் விளைவிப்பவர்கள் மீதும் ரவுடிகள் மீது மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும், நீதிமன்ற அலுவல்கள் குறித்தும் மற்றும் பல்வேறு நிகழ்வுகள் குறித்தும் ஆய்வு நடைபெற்றது.

இந்த ஆய்வு கூட்டத்திற்கு திருநெல்வேலி மண்டலம் குற்ற தொடர்பு துறை இணை இயக்குநர் சுப்புராஜா அரசு வழக்கறிஞர், திருநெல்வேலி குற்றவியல் நீதித்துறை நடுவர் எண் I நீதிமன்றத்தின் அரசு உதவி வழக்கறிஞர், குற்றவியல் நீதித்துறை நடுவர் எண் II நீதிமன்றத்தின் அரசு உதவி வழக்கறிஞர், அம்பாசமுத்திரம், சேரன்மகாதேவி, வள்ளியூர் மற்றும் நாங்குநேரி நீதித்துறை நடுவர் அரசு உதவி வழக்கறிஞர்கள், போக்சோ நடுவர் நீதிமன்ற அரசு வழக்கறிஞர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க | நெல்லையில் கோடை கால பயிற்சி முகாம்.. மிஸ் பண்ணிடாதீங்க!

திசையன்விளை காவல் சரகத்திற்குட்பட்ட பகுதியில் அரசு பேருந்து உடைத்து சேதப்படுத்திய வழக்கில் தண்டனை வழங்கப்பட்ட குற்றவாளி 16 வருடங்களாக தலைமறைவாக இருந்தவரை வள்ளியூர் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் யோகேஷ்குமார் உத்தரவின் பேரில் தேடிவந்த நிலையில் எதிரியை கண்டுபிடித்து நீதிமன்றத்தில் ஒப்படைத்து தண்டனை பெற்றுக் கொடுத்த முதல் நிலைக் காவலர்கள் தங்கராஜ், சின்னதுரை ஆகியோருக்கும்,

பாப்பாக்குடி காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட பனையங்குறிச்சி வனப்பகுதியில் மானை வேட்டையாடிய ஏழு பேரை பாப்பாக்குடி உதவி ஆய்வாளர் ஆபிரகாம் , தலைமை காவலர் முத்துராஜ், சிறப்பு காவல் படை இரண்டாம் நிலை காவலர்கள் ஜெயராம், விபின் ஆகியோர் பிடித்து வனத்துறையிடம் ஒப்படைத்து ஏழு பேரையும் கைது செய்தும், 2 துப்பாக்கிகள் மற்றும் ஒரு காரையும் பறிமுதல் செய்து நடவடிக்கை எடுக்க காரணமாக இருந்ததற்காகவும்,

கங்கைகொண்டான் காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட தனியார் நிறுவனத்திலிருந்து போலியான அடையாளங்கள் மூலமாக 3 பேர் ரூ. 2 லட்சம் மதிப்புள்ள ஆஸ்பட்டா சீட்டை நிறுவனத்தில் இருந்து எடுத்துக்கொண்டு உரிய இடத்தில் ஒப்படைக்காமல் ஏமாற்றி திருடி சென்ற வழக்கில் எதிரிகளை கைது செய்ததற்காக கங்கைகொண்டான் உதவி ஆய்வாளர் சுதன், சிறப்பு உதவி ஆய்வாளர் ஆறுமுகம், முதல் நிலை காவலர்கள் தங்கதுரை, கிருஷ்ணகுமார் ஆகியோர் உட்பட 11 பேருக்கு நற்சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.

இக்கூட்டத்தில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பாலச்சந்திரன் , மாவட்ட சைபர் கிரைம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஆறுமுகம் மற்றும் அனைத்து உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர்கள், காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் கலந்து கொண்டனர்.

top videos

    உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

    First published:

    Tags: Local News, Tirunelveli