முகப்பு /திருநெல்வேலி /

நகர்ப்புற நலவாழ்வு மையங்களில் காலிப்பணியிடங்கள்.. நெல்லை கலெக்டர் வெளியிட்ட செம்ம அப்டேட்..

நகர்ப்புற நலவாழ்வு மையங்களில் காலிப்பணியிடங்கள்.. நெல்லை கலெக்டர் வெளியிட்ட செம்ம அப்டேட்..

மாதிரி படம்

மாதிரி படம்

Job Opportunity | நெல்லையில் நகர்ப்புற நலவாழ்வு மையங்களில் வேலைவாய்ப்பு குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tirunelveli, India

திருநெல்வேலி சுகாதார மாவட்டத்திற்கு உட்பட்ட நகர்ப்புற நலவாழ்வு மையங்களில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு தகுதியுள்ளவர்கள் மாவட்ட நிர்வாகத்தின் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் தகவல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திருநெல்வேலி சுகாதார மாவட்டத்திற்கு உட்பட்ட நகர்ப்புற நலவாழ்வு மையங்களில் முற்றிலும் தற்காலிகமாக ஒப்பந்த அடிப்படையில் மருத்துவர் அலுவலர்கள் பல்நோக்கு சுகாதார பணியாளர்கள் (சுகாதார ஆய்வாளர் நிலை II) மருத்துவமனை பணியாளர்கள் பணியிடங்கள் மற்றும் துணை சுகாதார நிலையங்களில் காலியாக உள்ள பல்நோக்கு சுகாதார பணியாளர்கள் (சுகாதார ஆய்வாளர் நிலை II) ஆகிய பணியிடங்களை முற்றிலும் தற்காலிகமாக நிரப்பப்பட உள்ளன.

வேலைவாய்ப்பு விவரம்

இப்பணிகள் முற்றிலும் தற்காலிகமானவை என்பதால் இதன் மூலம் நிரந்தர பணியோ வேறு முன்னுரிமையோ சலுகைகளோ, பிற்காலத்தில் கோர இயலாது இதற்கான விண்ணப்பங்களை திருநெல்வேலி மாவட்ட நிர்வாகத்தின் http://tirunelveli.nic.in என்ற இணையதளத்தில் கல்வித் தகுதி மற்றும் இதர சான்றுகளுடன் பதிவேற்றம் செய்திட வேண்டும். விண்ணப்பங்களை இணையதளத்தில் 06.03.2023 மாலை 5 மணிக்குள் பதிவேற்றம் செய்யலாம் இணையதள விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும். இந்த அலுவலகத்தில் நேரிலோ தபால் மூலமாகவோ பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது” என தெரிவித்துள்ளார்.

First published:

Tags: Jobs, Local News, Tirunelveli