திருநெல்வேலியை சுத்தம் செய்யும் தூய்மை பணியாளர்கள் மே தினத்தில் சில கோரிக்கைகளை விடுத்துள்ளனர்.
2004 ஆம் ஆண்டு சுனாமி வந்தபோது சுத்தம் செய்ய தற்காலிகமாக தூய்மை பணியாளர்கள் நியமிக்கப்பட்டனர். இதே போன்று கஜாபுயல், கொரோனா போன்ற பெரும் தொற்று காலங்களில் முன்னின்று களப்பணியாளர்களாக பணியாற்றினார்கள். குறிப்பாக,கொரோனா பாதித்த ஒவ்வொரு தெருக்களிலும் யாரும் செல்லாத போதும் தூய்மை பணியாளர்கள் சென்று சுத்தம் செய்தார்கள். இவர்கள் செய்த சுத்தம் நோய் பரவாமல் இருக்க முக்கிய காரணமாக இருந்ததாக போற்றப்பட்டதது.
தன் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுவிடுமோ என்பதை கூட நினைக்காமல் வேலை செய்தார்கள். இந்நிலையில், இவர்கள் கிட்டத்தட்ட 19 வருடங்களாக எந்த ஒரு பணி பாதுகாப்பும் இன்றி வேலை செய்து வருவதாக கூறும் இவர்களுக்கு சரியான ஊதியம் கிடைக்கவில்லை என்றும், வாரத்திற்கு ஒரு நாள் லீவு கூட எடுக்க முடியாது என்றும், அப்படி எடுத்தால் அன்றைய தினகூலி அவர்களுக்கு கிடைக்காமல் போய்விடும் என்றும் வருத்தம் தெரிவித்துள்ளனர்.
இவர்களுக்கு திருநெல்வேலி மாவட்டத்தில் ஒரு நாள் கூலி 434 ரூபாய் குறைந்தபட்ச ஊதிய சட்டம் 2017 படி இவர்களுக்கு 500 ரூபாய் வழங்க வேண்டும் என தமிழ்நாடு அரசு ஆணையிட்டது. அந்தத் தொகை தற்போது அவர்களுக்கு வழங்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது. ஆனால், அரசு அலுவலர்களின் வீடுகளுக்கு தூய்மை பணியாளர்கள் இலவசமாக பணி செய்து கொடுப்பதாகவும் கூறப்படுகிறது.
பொதுமக்கள் எந்தவித இடர்பாடும் இல்லாமல் இருந்தால் தங்களுக்கு மகிழ்ச்சியாக இருக்கும் என்று கூறும் தூய்மை பணியாளர்கள், தமிழ்நாடு அரசு 2007 ஆம் ஆண்டு தமிழ்நாடு தூய்மை பணியாளர் நல வாரியம் தொடங்கப்பட்டு அந்த நல வாரியத்தில் உறுப்பினராக இருக்கும் ஒவ்வொரு தூய்மை பணியாளர்களுக்கும் சலுகைகள், ஊக்க தொகைகள், நலத்திட்டங்கள் செய்து கொடுக்கப்படுகிறது.
இதையும் படிங்க | திருநெல்வேலி மாவட்ட பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் : 22 மனுக்களுக்கு தீர்வு
மேலும் அவர்களுக்கு கல்வி உதவித்தொகை, திருமண உதவித் தொகை, பிரசவ உதவித்தொகை, விபத்துக்கான இழப்பீடு உள்ளிட்டவற்றைத் தமிழ்நாடு அரசு செய்து கொடுக்கிறது. இந்நிலையில், தூய்மை பணியாளர்களின் கோரிக்கையாக குறைந்தபட்ச ஊதிய சட்டத்தை கொண்டு வர வேண்டும், பணி நிரந்தரம் வேண்டும் உள்ளிட்டவைகள் முன்வைக்கப்படுகின்றன.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Nellai, Tirunelveli