முகப்பு /திருநெல்வேலி /

திருநெல்வேலியில் ஆறாவது புத்தகத் திருவிழா நாளை தொடக்கம்- 110 அரங்குகளில் லட்சக்கணக்கான புத்தகங்கள் தயார்...

திருநெல்வேலியில் ஆறாவது புத்தகத் திருவிழா நாளை தொடக்கம்- 110 அரங்குகளில் லட்சக்கணக்கான புத்தகங்கள் தயார்...

X
புத்தக

புத்தக கண்காட்சி

Tirunelveli book fair | திருநெல்வேலியில் ஆறாவது புத்தகத் திருவிழா நாளை தொடங்கவுள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tirunelveli, India

திருநெல்வேலியில் பொருநை நெல்லை ஆறாவது புத்தக திருவிழா நாளை முதல் தொடங்குகிறது.

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை வ உ சி மைதானத்தில் பொருநை நெல்லை ஆறாவது புத்தக திருவிழா நாளை தொடங்கி 11 நாட்கள் நடக்கிறது. அதாவது பிப்ரவரி 25 முதல் மார்ச் 7ஆம் தேதி வரை நடக்க இருக்கிறது. இதற்கான சின்னமாக ஆதினி என்ற பெயரிடப்பட்ட இருவாச்சி பறவை சின்னத்தை மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் வெளியிட்டார். தொடர்ந்து புத்தகப் பாலம் திட்டத்தையும் தொடங்கி வைத்தார்.

இதுகுறித்து பேசிய அவர், ‘தமிழ்நாடு அரசின் சார்பில் திருநெல்வேலி பாளையங்கோட்டை வ உ சி மைதானத்தில் நாளை முதல் அடுத்த மாதம் ஏழாம் தேதி வரை ஆறாவது பொருநை நெல்லை புத்தக திருவிழா நடத்தப்பட உள்ளது. முதல் மூன்று நாட்கள் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு அரங்குகள் மற்றும் பயிற்சி பட்டறைகள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

இந்த புத்தகத் திருவிழாவில் தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கத்தின் சார்பில் 110 புத்தக அரங்குகள் அமைக்கப்பட உள்ளன. இதில் நெல்லை மாவட்டத்தில் உள்ள சிறை நூலகம், அரசு பள்ளிக்கூட நூலகங்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு பள்ளிகளில் உள்ள நூலகங்களுக்கு புதிய புத்தகங்களை நன்கொடையாக வழங்கும் புத்தக பாலம் எனும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.

புத்தகங்களை நன்கொடையாக வழங்க விரும்புவர்கள் https://nellaibookfair.in என்ற இணையதள முகவரியின் மூலம் அடுத்த மாதம் ஏழாம் தேதி மாலை 5 மணி வரை நன்கொடை வழங்கலாம். புத்தக கண்காட்சியின் ஒரு பகுதியாக செய்தி மக்கள் தொடர்பு துறையின் சார்பில் ஓயா உழைப்பின் ஓராண்டு... கடைக்கோடி தமிழரின் கனவுகளை தாண்டி.. என்ற பெயரில் புகைப்பட கண்காட்சி மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளன.

ஓலைச்சுவடிகளை எப்படி டிஜிட்டல் மயமாக்குகின்றனர் தெரியுமா? திருநெல்வேலி சுவடியியல் பாதுகாப்பு குழுமத்துக்கு ஒரு விசிட்..

பகல் நேரங்களில் பள்ளி, கல்லூரி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள், பல்வேறு போட்டிகள் நடத்தப்படும். மாலையில் நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகள், அறிஞர்களின் கவியரங்கம், பட்டிமன்றம் போன்ற நிகழ்ச்சிகள் நடத்தப்படவுள்ளன என்று தெரிவித்தார்.

First published:

Tags: Local News, Tirunelveli