முகப்பு /திருநெல்வேலி /

நெல்லை மக்களே உஷார்.. அம்பாசமுத்திரத்தில் போக்குவரத்து மாற்றம்!

நெல்லை மக்களே உஷார்.. அம்பாசமுத்திரத்தில் போக்குவரத்து மாற்றம்!

நெல்லையில் போக்குவரத்து மாற்றம்

நெல்லையில் போக்குவரத்து மாற்றம்

ambasamuthiram route change | பாலங்கள் விரிவுபடுத்தும் பணிகள் காரணமாக, திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்தில்  போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

  • Last Updated :
  • Ambasamudram, India

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் நெடுஞ்சாலை துறை சார்பில் இரண்டு பாலங்களை விரிவுபடுத்தும் பணி தொடங்கியது. இதனால் அங்கே போக்குவரத்து மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

அதன்படி, திருச்செந்தூர்-தென்காசி நெடுஞ்சாலையில் சாலையை விரிவுபடுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இதனால், அம்பாசமுத்திரம்-கிருஷ்ணன் கோயில் அருகிலும், தீர்த்தபதி மேல்நிலைப்பள்ளி அருகிலும் உள்ள பாலங்கள் அகற்றப்பட்டு விரிவுபடுத்தும் பணி வியாழக்கிழமை தொடங்கியது.

இதனால், கல்லிடைக்குறிச்சியில் இருந்து அம்பாசமுத்திரம் வரும் இரண்டு சக்கரம் மற்றும் இலகுர வாகனங்கள் தாமிரபரணி ஆற்றுச் சாலை வழியாகவும், முக்கூடலில் இருந்து வரும் இரண்டு சக்கர மற்றும் இலகுர வாகனங்கள் தீர்த்தபதி பள்ளி அருகே அமைக்கப்பட்டுள்ள மாற்றுப் பாதை வழியாகவும் நகருக்குள் அனுமதிக்கப்படுகின்றன.

கல்லிடைக்குறிச்சி வழியாக அம்பாசமுத்திரம் வரும் அரசு பேருந்துகள், கிருஷ்ணன் கோயில் அருகே அமைக்கப்பட்டுள்ள திடலில் நிறுத்தப்பட்டு, திருப்பி அனுப்பப்படுகின்றன.பாபநாசம், தென்காசியில் இருந்து திருநெல்வேலி வள்ளியூர் நாகர்கோயில் செல்லும் பேருந்துகள் மற்றும் அனைத்து கணரக வாகனங்களும்,வாகைகுளம் விளக்கு வழியாக அம்பாசமுத்திரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் வழியாக இடைகால் பாப்பாக்குடி வழியாக அனுப்படுகின்றன.

ALSO READ | அயோத்தி திரைப்படம் போல நிஜ சம்பவம்.. இறந்த உடலை அசாம் எடுத்து செல்ல தவித்த கூலித் தொழிலாளிகள்... உதவிய தமிழக ஐஏஎஸ்..!

top videos

    பாலம் வேலை நடைபெறுவதால் அம்பாசமுத்திரம் நகராட்சியில் சில பகுதிகளில் குடிநீர் வினியோகம் தடைபடும் என்றும், அவ்வாறுகுடிநீர் தடைபடும் பகுதிகளில் வாகனங்கள் மூலம் சுழற்சி முறையில் குடிநீர் வினியோகம் செய்யப்படும் எனவே பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என்று நகர்மன்ற தலைவர் பிரபாகரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    First published:

    Tags: Local News, Nellai, Tirunelveli