முகப்பு /திருநெல்வேலி /

பல நோய்களை குணமாக்கும் மருந்து..? இந்த மரத்தில் இவ்வளவு மருத்துவ குணங்கள் உள்ளதா?

பல நோய்களை குணமாக்கும் மருந்து..? இந்த மரத்தில் இவ்வளவு மருத்துவ குணங்கள் உள்ளதா?

X
மாதிரி

மாதிரி படம்

Ancient Trees In Nellai : பழமையான மரங்கள் குறித்து நெல்லையை சேர்ந்த இயற்கை ஆர்வலர் விளக்கமளிக்கிறார்.

  • Last Updated :
  • Tirunelveli, India

வேங்கை மரத்தில் ஒரு குவளை செய்து அதில் நீரை ஊற்றி வைத்தால் கொஞ்ச நேரத்தில் அது சிவப்பு நிறமாகிவிடும். இந்த நீரைக் குடித்தால் சர்க்கரை நோய் சீராகுமாம், இந்தமுறையை ஆயுர்வேத மருத்துவத்தில் இன்றைக்கும் பயன்படுத்துகிறார்கள் என கூறப்படுகிறது.

இந்நிலையில், மரங்கள் குறித்து தனியார் தொண்டு அமைப்பை சேர்ந்த இயற்கை ஆர்வலர் தணிகைவேல் கூறுகையில், “இலுப்பை மரத்தின் இலுப்பை எண்ணெய் தமிழர் வாழ்வில் நீண்ட காலமாக விளக்கேற்ற பயன்படுத்தினர். இடுப்பு வலிக்கும் இது மருந்தானது.

மருத மரத்தின் பாகங்களிலிருந்து புற்றுநோயை தடுக்கும் மருந்து தயாரிக்கிற ஆராய்ச்சி நடந்து கொண்டிருக்கிறது.

நமது மண்ணிற்கு துளியும் பொருத்தமில்லாத தூங்குமூஞ்சி, மயில் கொன்றை உள்ளிட்ட மரக்கன்றுகள் நடப்படுகின்றன.

இப்படி வளரும் மரங்களில் காய்கள், பழங்கள் எதுவும் வராது. இம்மரங்களில் தங்களுக்கு தேவையான உணவு ஆதாரம் எதுவும் இல்லை என்பதால் பெரும்பாலான பறவைகள், விலங்குகள் இம்மரங்களை நாடுவதில்லை. பறவைகளின் வருகை குறைந்ததால் பாரம்பரிய மரங்களின் இயல்பான இனப்பெருக்கமும் மட்டுப்பட்டது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

அதற்கு காரணம், பறவைகள் உண்ட பிறகு, அவற்றின் எச்சம் வழியாக வெளியேறும் விதையிலிருந்தே ஆரோக்கியமான கன்று முளைக்கும். நம் மண்ணிற்கு சொந்தமான மரங்களில் தான் பல்லுயிர் சூழல் இருக்கிறது. சில பறவைகள் குறிப்பிட்ட சில மரங்களில் மட்டுமே கூடுகட்டும்.

top videos

    சூழலுக்கு சற்றும் ஒத்துவராத மரங்கள், அதிக நீரை உறிஞ்சும். இதனால், புல் வெளிகளுக்கு நீர் கிடைக்காது. அதை நம்பி வாழ்கிற விலங்குகள் குறைந்து, உயிர் சுழற்சியே மொத்தமாக மாறிவிடும்” என தெரிவித்தார்.

    First published:

    Tags: Local News, Tirunelveli