முகப்பு /திருநெல்வேலி /

காட்டு தீ விபத்தை தவிர்ப்பது எப்படி? - நெல்லையை சேர்ந்த இயற்கை ஆர்வலர் விளக்கம்!

காட்டு தீ விபத்தை தவிர்ப்பது எப்படி? - நெல்லையை சேர்ந்த இயற்கை ஆர்வலர் விளக்கம்!

X
காட்டு

காட்டு தீ விபத்தை தவிர்ப்பது எப்படி?

Wild Fires | காட்டு தீ விபத்தை எப்படி தவிர்ப்பது என்பது குறித்து திருநெல்வேலையைச் சேர்ந்த இயற்கை ஆர்வலர் மதிவாணன் விளக்கம் அளித்துள்ளார்.

  • Last Updated :
  • Tirunelveli, India

கோடை காலங்களில் காடுகளில் அதிகமான காய்ந்த இலைகள் காணப்படும். அந்த சமயங்களில் வெப்பத்தின் காரணமாக காய்ந்த இலைகள் தீப்பற்றி விடும். சுற்றுப்புற சூழலிலுள்ள வெப்பநிலை, காற்றின் வேகம், பொறுத்து காட்டுத் தீ ஏற்படுகிறது. அதிக காற்றின் வேகத்தினால் மூங்கில் மரங்கள் உராய்ந்து மற்றும் கற்கள் ஒன்றோடொன்று உருண்டு தீயை ஏற்படுத்துகின்றன. இயற்கை மட்டுமின்றி காட்டுத் தீ மனிதனாலும் ஏற்படுகிறது.இதுகுறித்து தன்னார்வ தொண்டு அமைப்பைச் சேர்ந்த மதிவாணன் நம்மிடம் பல்வேறு தகவல்களை பகிர்ந்து கொண்டார்.

அவர் கூறியதாவது: காட்டு தீயை கட்டுப்படுத்த வனத்துறையினர் நடவடிக்கைகள் எடுப்பார்கள். தற்போது சாட்டிலைட் படங்கள் மூலம் காட்டுக்கு எங்கெல்லாம் உள்ளது என்பது தெரிந்து விடுகிறது. அந்த அளவிற்கு தொழில்நுட்ப வளர்ச்சி இருக்கிறது. வெளிநாடு போன்று இந்தியாவில் தொழில்நுட்பங்கள் இல்லாவிட்டாலும் ஃபயர் லைன் போன்றவை காடுகளில் அமைக்கப்படுகின்றனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

top videos

    காடுகளுக்கு உள்ளே தீ விபத்து ஏற்பட்டால் அங்கு வனத்துறையினர் செல்வதற்கு சிரமம் ஏற்படுகிறது. இது போன்ற வெளிநாடுகளில் ஏற்பட்டால் ஹெலிகாப்டர் மூலம் தண்ணீர் தெளித்து, காட்டுத் தீயானது அணைக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் மலைப்பகுதிகள் உள்ள ஒவ்வொரு இடத்திற்கும் ஹெலிகாப்டர் வேண்டும் என்று இல்லை, மொத்தமாக தமிழ்நாட்டிற்கு ஒரு ஹெலிகாப்டர் இருந்தாலே போதுமானது. இதன் மூலம் வனத்துறையினரும் காட்டிற்குள் விரைவில் சென்று தீயை அணைக்க முயற்சி செய்ய முடியும். பெரும்பாலான காட்டுத் தீ, மனித நடவடிக்கையால் மட்டுமே நிகழ்கிறது. எனவே மலையை ஒட்டிய பகுதிகள் காடுகளுக்குள் செல்லும் பொதுமக்கள் கவனமுடன் இருக்க வேண்டும் என்று கூறினார்.

    First published:

    Tags: Local News, Tirunelveli