முகப்பு /திருநெல்வேலி /

பாளையங்கோட்டை இஸ்கான் கோவிலில் நரசிம்மர் அவதார திருவிழா!

பாளையங்கோட்டை இஸ்கான் கோவிலில் நரசிம்மர் அவதார திருவிழா!

X
பாளையங்கோட்டை

பாளையங்கோட்டை இஸ்கான் கோவிலில் நரசிம்மர் அவதார திருவிழா

ISKCON Temple in Nellai | திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் உள்ள இஸ்கான் கோவிலில் நரசிம்மர் அவதார திருவிழா விமர்சையாக நடைபெற்றது.

  • Last Updated :
  • Tirunelveli, India

திருநெல்வேலி வண்ணாரப்பேட்டை இஸ்கான் ஹரே கிருஷ்ணா கோவிலில் நரசிம்மர் அவதார திருவிழா நடைபெற்றது. ஸ்ரீ கிருஷ்ணர் தனது பக்தன் பிரகலாதனை காக்க நரசிம்மராக அவதரித்தார். அந்த விழாவை கொண்டாடும் வகையில் இக்கோவிலில் ஸ்ரீ லட்சுமி நரசிம்மருக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றன.

ஹரி நாம யக்ஞம், மகா அபிஷேகம் நரசிம்ம பிராத்தனை உள்ளிட்டவை நடைபெற்றன. மகா அபிஷேகத்திற்கு 9 கலசங்களில் புனித நீர் நிரப்பப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. மேலும் பால் பழம் உள்ளிட்டவை பஞ்சராத்ரிக முறை படியான திருமஞ்சனமும் நடைபெற்றன.

பாளையங்கோட்டை இஸ்கான் கோவிலில் நரசிம்மர் அவதார திருவிழா

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

அபிஷேகத்தின் போது ஸ்ரீ கிருஷ்ணரின் புகழ் பாடுவதற்காக ஹரி நாம பஜனையும் நரசிம்ம அவராத மகிமை பற்றி சிறப்புரையும் நடைபெற்றன. விழாவிற்கான ஏற்பாடுகளை இஸ்கான் பக்தர்கள் குழுவினர் செய்தனர் இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

top videos
    First published:

    Tags: Local News, Tirunelveli