முகப்பு /திருநெல்வேலி /

“வாழ்வில் சாதித்தவர்களை முன்மாதிரியாக எடுத்து முன்னேறுங்கள்.." நெல்லை மாநகராட்சி ஆணையர் பேச்சு..

“வாழ்வில் சாதித்தவர்களை முன்மாதிரியாக எடுத்து முன்னேறுங்கள்.." நெல்லை மாநகராட்சி ஆணையர் பேச்சு..

நெல்லை மாநகராட்சி ஆணையர் பேச்சு

நெல்லை மாநகராட்சி ஆணையர் பேச்சு

Nellai Corporation Commissioner : திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் உள்ள சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் மாணவர் பேரவை நிறைவு விழாவில் மாநகராட்சி ஆணையாளர் சிவகிருஷ்ணமூர்த்தி பேசினார்.

  • Last Updated :
  • Tirunelveli, India

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் உள்ள சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் மாணவர் பேரவை நிறைவு விழாநடைபெற்றது. மாணவர் பேரவைத் தலைவர் ஹெச்.சபீக் அஸ்வான் வரவேற்றுப் பேசினார். கல்லூரித் தாளாளர் ஹாஜி த.இ.செ.பத்ஹுர் ரப்பானி, தமிழ்த் துறையும் மாணவர் பேரவையும் இணைந்து தயாரித்துள்ள வளர்பிறை மாணவர் கவிதை தொகுப்பை வெளியிட்டுத் தலைமையுரையாற்றினார். கல்லூரி முதல்வர் டாக்டர் சே.மு. அப்துல்காதர், துணை முதல்வர் டாக்டர் எஸ்.எம்.ஏ.செய்யது முகம்மது காஜா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

ஆட்சிக்குழுத் தலைவர் ஹாஜி வாவு எஸ்.செய்யது அப்துர் ரஹ்மான், ஆட்சிக்குழு உறுப்பினர்கள் ஹாஜி எம்.கே.எம். முகம்மது நாசர், பொறியாளர் எல்.கே.எம்.ஏ.முகமது நவாப் ஹுசேன், பேராசிரியர் அபுபக்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாணவர் பேரவைத் தேர்தல் ஆணையர் முனைவர் ஆ.ஹாமில், பேரவைத் துணைத் தலைவர் மரியம் மர்சுகா, இணைச்செயலாளர் ஹபீபா சமீரா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். தமிழ்த் துறைத் தலைவர் முனைவர் ச.மகாதேவன் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து நடத்தினார்.

இந்த ஆண்டு பணி நிறைவுபெறும் கணினித் துறை இணைப் பேராசிரியர் அமீர் ஹம்சா, தமிழ்த் துறை இணைப்பேராசிரியர் முனைவர் அ.மு.அயூப் கான், கணிதத்துறைத் தலைவர் முனைவர் ரஷீதா பேகம், நூலக உதவியாளர் ரஹ்மத்துல்லா ஆகியோருக்கும் 86 வகுப்புப் பிரதிநிதிகள் மற்றும் பேரவைப் பொறுப்பாளர்களுக்கு நினைவுப் பரிசுகள் வழங்கினார்.

இதையும் படிங்க : விழுப்புரத்தில் ரசாயன கற்கள் மூலம் பழுக்க வைக்கப்பட்ட 1 டன் எடையுள்ள மாம்பழங்கள் பறிமுதல்

பின்னர் திருநெல்வேலி மாநகராட்சி ஆணையாளர் சிவகிருஷ்ணமூர்த்தி சிறப்புரையாற்றும்போது, “மாநகராட்சியின் பணிகள் பிறப்பு முதல் இறப்பு வரை எல்லாவற்றையும் இணைப்பதாக உள்ளது. சென்னையில் உள்ள கல்லூரிக்கு இணையான தரம் மிக்க கல்லூரியாக A++ உயர் தரம் பெற்ற கல்லூரியாக சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி திகழ்கிறது.

மாவட்ட நிர்வாகத்தின் இலக்கியத் திருவிழா, பொருநை புத்தகத் திருவிழா ஆகிய விழாக்களுக்கு இக் கல்லூரியும் பேராசிரியர்களும் மாணவர்களும் பெரிதும் உதவியிருக்கிறது. கூலி வேலை செய்த தந்தையின் மகனாகப் பிறந்து நான் ஐ.ஏ.எஸ் தேர்ச்சி பெற்றேன். யாரையாவது நாம் முன்மாதிரியாகக் கொள்ள வேண்டும். என் சகோதரி காவல் துறையில் பணியாற்றுகிறார்.

அவரைப் பார்த்து நான் முன்னேறினேன். என் ஆசிரியர் என்னுள்ளே ஐ.ஏ.எஸ். கனவைப் பதித்தார்கள். என் குறிப்பேட்டில் என் பெயருக்குப் பின்னால் ஐ.ஏ.எஸ். என்று எழுதிப் பழகினேன். உயர்கல்வி படிக்க வாய்ப்பு எத்தனை பேருக்கு இருக்கிறது? இந்த கல்லூரியின் நல்ல தரமான கல்விச் சூழல் உங்களை உயர்த்தட்டும். வாழ்வில் வசந்த காலம் நீங்கள் கல்லூரியில் படிக்கும் காலம்தான். நாம் என்னவாக மாற வேண்டும் என நினைக்கிறமோ அதைப் போல் ஆகிறோம்.

இதையும் படிங்க : 'வந்தாச்சு புயல்' ராமநாதபுரம் மக்களே உஷார்.. 1ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்!

நம்மை நாமே ஊக்கப்படுத்துவது நம்மை உயர்த்தும். எதையும் செய்ய முடியும் என்கிற எண்ணம் வேண்டும். தொடங்குவது எளிது தொடர்வது கடினம். எனவே பொறுமையாக நம் இலக்கை நோக்கி நகர உழைக்க வேண்டும். நேர்வழியில் நேர்மையாகச் சரியான வழியில் செய்வது முக்கியம். உங்கள் நிலையான தன்மை உங்களை மென்மேலும் கொண்டு செல்லும். நீங்கள் உங்களை நம்பாவிட்டால் வேறு யார் நம்புவார்? என் ஆசிரியர்களுக்கு நான் கடமைப்பட்டிருக்கிறேன்.

வாய்ப்புகளைச் சரியாகப் பயன்படுத்துங்கள். போட்டித் தேர்வுகளுக்கு மாணவர்கள் படிப்பதற்குப் புதிய பேருந்து நிலையத்தில் குளிரூட்டப்பட்ட அறையை மாநகராட்சி தந்துள்ளது. மாணவர்கள் போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற மாநகராட்சி உதவும்" என்று பேசினார்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

top videos

    இளைஞர் நலத்துறை ஒருங்கிணைப்பாளர் முனைவர் அ.சே.சேக் சிந்தா சங்கமம் எனும் இளையோர் கலைவிழாவை ஒருங்கிணைத்து நடத்தினார். மாணவர் பேரவைச் செயலாளர் ரவிகிருஷ்ணன் நன்றி கூறினார்.விழாவுக்கான ஏற்பாடுகளை மாணவர் பேரவை சிறப்பாகச் செய்திருந்தது.

    First published:

    Tags: Local News, Tirunelveli