திருநெல்வேலியில் உணவு கலப்படம் குறித்து அறிந்துகொள்ள இலவசமாக பரிசோதனை செய்ய புதிய நடமாடும் உணவு பகுப்பாய்வக வாகனம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
சென்னையில் ஜனவரி 12ஆம் தேதி அமைச்சர் மா சுப்பிரமணியன் நான்கு புதிய நடமாடும் உணவு பகுப்பாய்வக வாகனத்தை தொடங்கி வைத்தார். ஏற்கனவே இரண்டு நடமாடும் உணவு பகுப்பாய்வக வாகனங்கள் இயங்கி வருகிறது. இந்நிலையில் மொத்தம் ஆறு நடமாடும் உணவு பகுப்பாய்வக வாகனங்கள் இயங்கி வருகின்றன. அவைகள் சென்னை, மதுரை, நெல்லை, தஞ்சாவூர், சேலம், கோவை ஆகிய மாவட்டங்களில் இயக்கப்பட்டு வருகின்றன.
நெல்லை மாவட்டத்தில் குடியரசு தினத்தின் போது மாவட்ட ஆட்சியர் விஷ்ணு புதிய நடமாடும் உணவு பகுப்பாய்வக வாகனத்தை அறிமுகப்படுத்தினார். நெல்லை மாவட்ட உணவு பாதுகாப்பு துறை சார்பில் நடமாடும் உணவு பகுப்பாய்வக வாகனம் மாவட்ட முழுவதும் இயக்கப்பட்டு உணவு கலப்படம் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இன்று ஜங்ஷன் ரயில் நிலையம் அருகே உள்ள கடைகளில் உணவில் கலப்படம் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
அப்போது ஜூஸ், வாட்டர், சிக்கன், கூல்டிரிங்ஸ், கேக், ஐஸ்கிரீம், டீ தூள் உள்ளிட்டவை பெறப்பட்டு அதில் கலப்படம் உள்ளதா என பரிசோதனை செய்யப்பட்டது. இந்த வாகனத்தின் ஒரு பகுதியில் டிவி வைக்கப்பட்டுள்ளது.
அதில் உணவு கலப்படம் குறித்து விழிப்புணர்வு செய்யப்படுகிறது. மேலும் அத்துறை அலுவலர்கள் மைக் மூலம் உணவு கலப்படம் குறித்து விழிப்புணர்வு செய்கின்றனர். பொதுமக்கள் வந்து நிற்கும் வகையில் வாகனத்தின் மேலே நிழற்குடை அமைக்கப்பட்டுள்ளது.
உணவு கலப்படம் குறித்த தகவல்கள் சுழலும் பேனரில் வந்து செல்கிறது. பொதுமக்கள், கடைக்காரர்கள் தங்களின் உணவு பொருட்களை கொண்டு வந்து வைப்பதற்கு பலகை அமைக்கப்பட்டுள்ளது.
ஒருவேளை வாகனம் அவசரமாக செல்ல வேண்டும் என்ற நிலை ஏற்பட்டால் அலாரம் ஒலிக்கும் வகையில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. நடமாடும் உணவு பகுப்பாய்வக வாகனத்தின் உள்ளே உணவு கலப்படம் இருந்தால் அதனை பதிவு செய்து கம்ப்யூட்டர் தகவல்களை காப்பி எடுக்க பிரிண்டர் வசதி உள்ளது.
ஏசி மற்றும் ஃபேன் உள்ளன. அலுவலர்கள் பரிசோதனை செய்த பின்பு கை, முகங்களை சுத்தம் செய்யும் வசதிகள், நவீன வசதிகளுடன் கூடிய லேப், ஜெனரேட்டர், யுபிஎஸ் போன்றவை அமைக்கப்பட்டுள்ளன. நெல்லையில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த நடமாடும் உணவு பகுப்பாய்வு வாகனம் கன்னியாகுமாரி,தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களுக்கும் உணவின் தரம் குறித்து ஆய்வு செய்ய செல்கிறது.
அட்டைப் பூச்சி தெரபி கேள்விப்பட்டிருக்கிறீர்களா? அதனால் என்ன நன்மை?
இதுகுறித்து உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் கூறுகையில் பொதுமக்கள், கடைக்காரர்கள், மாணவர்கள் தாங்களாக முன்வந்து உணவின் தரத்தை ஆய்வு செய்து கொள்ள வேண்டும். மேலும் பொதுமக்கள் புகார் அளிக்க 944 40 42 322 என்ற whatsapp எண் வழங்கப்பட்டுள்ளது. இதில் புகார் அளித்தால் அவர்களின் ரகசியங்கள் பாதுகாக்கப்படும் என தெரிவித்தனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Tirunelveli