முகப்பு /திருநெல்வேலி /

கோலாகலமாக நடந்த நெல்லை மீனாட்சி சொக்கலிங்க சுவாமி திருக்கல்யாணம்!

கோலாகலமாக நடந்த நெல்லை மீனாட்சி சொக்கலிங்க சுவாமி திருக்கல்யாணம்!

X
நெல்லை

நெல்லை மீனாட்சி சொக்கலிங்க சுவாமி திருக்கல்

நெல்லை மீனாட்சி சொக்கலிங்க சுவாமி திருக்கல்யாணத்தில் புதிதாக திருமணமான பெண்கள் திருமாங்கல்ய கயிறு மாற்றி வழிப்பட்டனர்.

  • Last Updated :
  • Tirunelveli, India

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு மீனாட்சி- சொக்கலிங்க சுவாமி திருக்கல்யாணம் நடைபெற்றது.

பாளையங்கோட்டையில் உள்ள மீனாட்சி அம்மன் கோவில், மதுரைக்கு அடுத்தபடியாக திருநெல்வேலியில் உள்ள பிரசித்தி பெற்ற தலமாக கருதப்படுகிறது.

இங்கே, சித்திரை திருவிழாவை முன்னிட்டு மீனாட்சி-சொக்கலிங்க சுவாமி திருக்கல்யாணம் நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். பின்னர், சுமங்கலி பெண்கள் புதிதாக திருமாங்கல்ய சரடு மாற்றி மகிழ்ந்தனர்.

திருக்கல்யாணம்

பாளையங்கோட்டை மீனாட்சி- சொக்கலிங்க சுவாமி கோயில் சித்திரைத் திருவிழா கடந்த சில தினங்களுக்கு முன்பு கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் சுவாமி, அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் ஆராதனைகள் நடைபெற்றன.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக்செய்க

இந்நிலையில், மே இரண்டாம் தேதி திருக்கல்யாணம் நடைபெற்றது. இதற்காக திருக்கல்யாண மேடையை பல வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தன. மல்லிகை, கனகாம்பரம், சம்பங்கி உள்ளிட்ட மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.

top videos

    இந்தக் கோவிலின் விசேஷமே திருமணம் ஆகாதவர்களும், குழந்தை பாக்கியம் இல்லாதவர்களும் வந்து வேண்டினால் வேண்டுதல்கள் உடனடியாக நடப்பதாக உள்ளூர் பக்தர்கள் தெரிவித்தனர்.

    First published:

    Tags: Local News, Thirunelveli