முகப்பு /திருநெல்வேலி /

நெல்லை மக்களுக்கு குட்நியூஸ்.. இனி இந்த ரயில் நெல்லை, மதுரை வழியாக செல்லும்!

நெல்லை மக்களுக்கு குட்நியூஸ்.. இனி இந்த ரயில் நெல்லை, மதுரை வழியாக செல்லும்!

ரயில்

ரயில்

Southern railway | கன்னியாகுமரி புனே இடையே இயக்கப்படும் விரைவு ரயில் மே21ஆம் தேதி காலை புறப்படுகிறது.

  • Last Updated :
  • Tirunelveli, India

பராமரிப்பு பணிகள் காரணமாக கன்னியாகுமரி புனே விரைவு ரயில் மே 21ஆம் தேதி திருநெல்வேலி வழியாக இயக்கப்படும் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே சார்பில் வெளியான செய்தி குறிப்பில், சென்னை எழும்பூர் எழும்பூரில் இருந்து ஞாயிற்றுக்கிழமை மே 21 காலை 9 மணிக்கு குருவாயூர் செல்லும் விரைவு ரயில் (16127) நிறுத்தப்படும். மறுமார்க்கமாக இந்த ரயில் குருவாயூரிலிருந்து (16128) மே 22ஆம் தேதி இரவு 11:15 மணிக்கு புறப்படுவதற்கு பதிலாக எர்ணாகுளத்தில் இருந்து மே 23ஆம் தேதி அதிகாலை 1. 20 மணிக்கு புறப்படும்.

கன்னியாகுமரி புனே இடையே இயக்கப்படும் விரைவு ரயில் (16382) கன்னியாகுமரியில் இருந்து ஞாயிற்றுக்கிழமை மே 21 காலை 8.40 மணிக்கு புறப்பட்டு எர்ணாகுளம், கோவை, திருப்பூர் வழியாக செல்வதற்கு பதிலாக திருநெல்வேலி, திண்டுக்கல், ஈரோடு வழியாக புனே சென்றடையும்.

திருவனந்தபுரத்தில் இருந்து ஞாயிற்றுக்கிழமை மே 21 இரவு 8.30 மணிக்கு மதுரை செல்லும் விரைவு ரயில் மறுமார்க்கமாக மதுரையிலிருந்து மே 22 ஆம் தேதி மாலை 4.10 மணிக்கு திருவனந்தபுரம் செல்லும் விரைவு ரயில் (16344) ஆகிய ரயில் சேவைகள் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

First published:

Tags: Local News, Southern railway, Tirunelveli, Train