திருநெல்வேலியில் கொடுக்காப்புளி விற்பனை சூடு பிடித்து வரும் நிலையில் மருத்துவ பயன் கருதி பலரும் அதை வாங்கி சாப்பிடுகின்றனர். உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கூடிய ஆற்றல் கொடுக்காப்புளிக்கு உண்டு என தெரிகிறது. இதில் உள்ள வைட்டமின், இரும்பு, கால்சியம், பொட்டாசியம் உள்ளிட்ட சத்துக்கள் ரத்தத்திலுள்ள வெள்ளை அணுக்கள் எண்ணிக்கையை அதிகரிக்க உதவுகின்றன என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
சர்க்கரை நோயை கட்டுப்படுத்துவதில் கொடுக்காப்புளிக்கு முக்கிய பங்கு உள்ளதால் நெல்லையில் பலர் அதை விரும்பி வாங்கி சென்று சாப்பிடுகின்றனர்.
இனிப்பு, துவர்ப்பு, கசப்பு உள்ளிட்ட சுவைகளை கொண்ட கொடுக்காப்புளியை கிராம மக்கள் அதிகமாக சாப்பிடுவது வழக்கமான ஒன்றாக உள்ளது. தற்போது நெல்லை மாநகர பகுதியில் கொடுக்காப்புளி விற்பனை சூடுபிடித்துள்ளது. முருகன் குறிச்சி, குல வணிகர் புறம், டவுன், பெருமாள்புரம் உள்ளிட்ட பகுதிகளில் கொடுக்காபுளி விற்பனை காணப்படுகிறது.
ஒரு கிலோ ₹ 300க்கு விற்கப்படும் கொடுக்காப்புளியை சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் தேவைக்கு ஏற்றபடி வாங்கி சாப்பிடுகின்றனர். கால் கிலோ ₹ 70 க்கு வாங்கி செல்வதில் பலர் ஆர்வம் காட்டுகின்றனர். வாத நோய் உள்ளவர்களும் குடல்புண் உள்ளவர்களும் கூட கொடுக்காப்புளியை அதிகம் விரும்புகின்றனர். அதிக நீர்ச்சத்து நிறைந்த கொடுக்காப்புளி பழங்கள் தற்போது நெல்லை மாநகர பகுதியில் அதிகளவு விற்பனையாகி வருவதாக பல விற்பனையாளர்கள் தெரிவித்தனர்.
இதுகுறித்து பழம் விற்பனையாளர் விஜி கூறுகையில் இந்த பழத்திற்கு உரம் தேவை இல்லை. வாய்க்காலுக்கு அறை ஓரம் இருந்தால் அங்குள்ள நீரை உறிஞ்சி மரம் வளர்ந்து விடும். பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் என மூன்று மாதம் மட்டுமே இதன் சீசன் ஆகும். மற்ற மாதங்களில் பழம் கிடைக்காது.
மாணவிகளிடம் அத்துமீறிய தாளாளர்... பள்ளியில் மாணவிகள் போராட்டம்! - நெல்லையில் பரபரப்பு!
இந்த பழத்தை பறிக்க மிகவும் கஷ்டப்படுகிறோம். ஏனென்றால் மரம் முழுவதும் முள் இருக்கும் அப்படி கஷ்டப்பட்டு எடுக்கின்ற பழத்தை விற்பனைக்கு கொண்டு வந்தால் நூறு ரூபாய்க்கு கேட்கின்றனர் என வருத்தம் தெரிவித்தார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Tirunelveli