முகப்பு /திருநெல்வேலி /

100% மின் இணைப்புடன் ஆதாரை இணைக்கும் பணி முடிந்தது- நெல்லையில் தீவிரமாக பணியாற்றம் மின் கோட்டங்கள்

100% மின் இணைப்புடன் ஆதாரை இணைக்கும் பணி முடிந்தது- நெல்லையில் தீவிரமாக பணியாற்றம் மின் கோட்டங்கள்

X
மின்

மின் வாரிய அலுவலகம்

Tirunelveli | தமிழ்நாடு முழுவதும் மின் இணைப்பு எண்ணுடன் ஆதாரை இணைக்கும் பணி வேகமாக நடைபெற்றுவருகிறது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tirunelveli, India

தென்காசி, கடையநல்லூர், சங்கரன்கோவில், வள்ளியூர், கோட்டங்களில் முழுமையாக 100% மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி முடிந்தது.

தமிழ்நாடு மின் வாரியம், இலவச மற்றும் மானிய விலையில் மின்சாரம் வழங்கும் நுகர்வோரின் மின் இணைப்பு எண்ணுடன், அவர்களின் 'ஆதார்' எண்ணை இணைக்கும் பணி, 2022 நவம்பர் 15-ம் தேதி தொடங்கியது. டிசம்பர் 31ம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டது.

பின், இம்மாதம் 31ம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டது. மின் வாரிய ஊழியர்கள் வீடுகளுக்கு நேரில் சென்று, ஆதார் இணைக்குமாறு கூறி வருகின்றனர். ஆதார் இணைக்க வழங்கப்பட்ட அவகாசம் மீண்டும் நீடிக்கப்பட்டது.

இந்நிலையில் திருநெல்வேலி மின் பகிர்மான வட்டத்திற்கு உட்பட்ட திருநெல்வேலி, தென்காசி மாவட்டத்தில் மொத்தம் ஏழு மின்வாரிய கோட்டங்கள் உள்ளன. அதில் தென்காசி, கடையநல்லூர், சங்கரன்கோவில், வள்ளியூர், கோட்டங்களில் முழுமையாக 100% மின் இணைப்பு என்னுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி முடிந்தது.

மற்ற மூன்று கோட்டங்கள் திருநெல்வேலி நகர்ப்புறம், திருநெல்வேலி கிராமப்புறம், கல்லிடைக்குறிச்சி ஆகிய மூன்று கோட்டங்களில் மின் இணைப்பு என்னுடன் ஆதார் எண் இணைக்கும் பணி விரைவாக நடைபெற்று வருகிறது.

வாகன ஓட்டிகளுக்கு திருநெல்வேலி மாநகர போலீஸ் கமிஷனர் விடுத்துள்ள முக்கிய எச்சரிக்கை

தற்போது மின் இணைப்பு உடன் 'ஆதார்' எண்ணை இணைக்க பிப்ரவரி 15-ம் தேதி வரை காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது. அதாவது மின் இணைப்புடன் ஆதாரை இணைக்க மேலும் 15 நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே ஒரு மாதம் அவகாசம் தந்த நிலையில் ஆதாரை இணைக்க மேலும் 15 நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

First published:

Tags: Local News, Tirunelveli