முகப்பு /திருநெல்வேலி /

பாளையங்கோட்டை ராஜகோபால சுவாமி கோயிலில் குழந்தைகளுக்கான கோடைகால சிறப்பு வகுப்பு..

பாளையங்கோட்டை ராஜகோபால சுவாமி கோயிலில் குழந்தைகளுக்கான கோடைகால சிறப்பு வகுப்பு..

X
நெல்லையில்

நெல்லையில் குழந்தைகளுக்கு எடுக்கப்பட்ட பாடம்

Nellai News : குழந்தைகளுக்கான கோடை கால ஹிந்து சமய பண்பாட்டு வகுப்பு நெல்லையில் நடைபெற்று வருகிறது.

  • Last Updated :
  • Tirunelveli, India

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் உள்ள ஸ்ரீராஜகோபால சுவாமி கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது. அண்மையில் இங்கு சித்திரை திருவிழா வெகு விமர்சையாக 10 நாட்கள் நடந்து முடிந்தது. தற்போது இந்த கோயிலில் குழந்தைகளுக்கான கோடைகால ஹிந்து சமய பண்பாட்டு வகுப்பு நடைபெற்று வருகிறது. இதனை ஹிந்து ஆலயப் பாதுகாப்பு இயக்கம் ஸ்ரீராஜகோபால சுவாமி கோயில் கிளை கமிட்டி சார்பில் நடத்தப்படுகிறது.

இந்த கோடைகால பயிற்சி வகுப்பு 20 நாட்கள் நடத்தப்படுகிறது. இந்த வகுப்பு காலை 10 மணி முதல் மதியம் 12 மணி வரை நடைபெறுகிறது. 100க்கும் மேற்பட்ட குழந்தைகள் இந்த பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டுள்ளனர். குழந்தைகளுக்கு இந்த பயிற்சியின்போது, பஜனைப்பாடல்கள், இந்து மத தத்துவங்கள், ஆன்மீக கதைகள் மற்றும் நல்ல பழக்கவழக்கங்கள் ஆகியவை கற்றுகொடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நெல்லையில் குழந்தைகளுக்கு எடுக்கப்பட்ட பாடம்

இந்நிலையில், குழந்தைகள் தங்களது அம்மாக்களுக்கு எவ்வாறு மரியாதை கொடுக்க வேண்டும் என்பது குறித்து பயிற்சியாளர் நதியா விளக்கிப் பேசினார். ஒவ்வொரு பெற்றோரும் தங்களது குழந்தைகளை ஆன்மீக அறிவு பெற்று சிறந்து விளங்க, பயனுள்ள இந்த ஆன்மீக வகுப்பில் கலந்துகொள்ளச் செய்யுங்கள் என்று ஹிந்து ஆலயப் பாதுகாப்பு இயக்கம் ஸ்ரீராஜகோபால சுவாமி கோயில் கிளை கமிட்டி சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

top videos
    First published:

    Tags: Local News, Tirunelveli