தனது 14 வயது முதல் பழமையான பொருட்களை சேகரித்து வருகிறார் திருநெல்வேலியை சேர்ந்த லெனின்.
நம்மில் பலருக்கும் பல வகையான பொழுதுபோக்குகள் இருப்பது வழக்கம். அது விளையாட்டாகவோ, சிலருக்கு புத்தகம் படிப்பதாகவோ, அல்லது வேறு வகையான பொழுதுபோக்குகளாகவோ இருக்கும். ஆனால், நம்மில் சிலர் மட்டுமே அரிதான பொருட்களை சேகரிப்பதில் ஆர்வம் காட்டுகின்றனர். அவ்வாறு சேகரிப்பவர்கள், பல இடங்களில் தேடி, அலைந்து பல்வேறு அரிய பொருட்களையும் பழமையான பொருட்களையும் சேகரித்து வருகின்றனர்.
அந்த வகையில், திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள நெல்லை லெனின்என்னவர், தனது 14 வயது முதல் பழமையான பொருட்களை சேகரித்து வருகிறார். இவரின் தந்தை தமிழ்ப் புலவர் என்பதால் பழமையான பொருட்களை சேகரிப்பதில் இவருக்கு ஆர்வம் ஏற்பட்டுள்ளது. தற்போது அவர் சேகரித்த பழமையான பொருட்களை புத்தகக் கண்காட்சியில் காட்சிப்படுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், “தனது தந்தை தமிழ் பண்பாடு கலாச்சாரம் குறித்து அடிக்கடி பேசுவார். அப்படி பேசும்போது அந்த பழமையான பொருட்களை சேகரிப்பதில் எனக்கு ஆர்வம் ஏற்பட்டது. அந்த உத்வேகம் தான் இந்த பொருட்களை சேகரிப்பதற்கு முக்கிய காரணம். எனது சேகரிப்பில் கற்பாண்டங்கள், மண்பாண்டங்கள், பழைய காலத்தில் உள்ள நில பட்டாக்கள் ஆகியவற்றை சேகரித்துள்ளேன். சிறிய பொருட்களை ஆராய்ந்து பார்க்கக்கூடிய தன்மையை மாணவர்களுக்கு ஏற்படுத்த வேண்டும்.
நெல்லை மாவட்டத்தில் பெரிய அருங்காட்சியகம் அமைக்க வேண்டும் என்பது எனது நோக்கம். இதற்காக எனது உழைப்பின் பெரும் பகுதியை செலவிட்டுள்ளேன். இங்கே, சித்த மருத்துவத்தில் பயன்படுத்தக்கூடிய இடி உரல் இருக்கிறது. பக்கா, நாழி, ஒரக்கா ஆகியவை உள்ளன. நமது வாழ்வின் நெறிமுறைகளை அறிந்து கொள்ள வேண்டும் . பழைய காலத்தில் திருமணத்திற்கு சீதனமாக கொடுக்கப்பட்ட ட்ரெங்கு பெட்டிகள் உள்ளன. அந்த காலத்தில் பயன்படுத்தப்பட்ட நெல் களஞ்சியம் ஆகியவை உள்ளன .மேலும் டெலிபோன் டிவி பைக் ரேடியோ போன்ற பழமையான பொருட்களும் நான் சேகரித்துள்ளேன்” என்று தெரிவித்தார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Tirunelveli