முகப்பு /திருநெல்வேலி /

கோவை நூலகம் மூடப்படுவதற்கு நெகிழ்ச்சியாக வருத்தம் தெரிவிக்கும் நெல்லை மாணவி!

கோவை நூலகம் மூடப்படுவதற்கு நெகிழ்ச்சியாக வருத்தம் தெரிவிக்கும் நெல்லை மாணவி!

X
வருத்தம்

வருத்தம் தெரிவிக்கும் மாணவி

Kovai Library : கோவை நூலகம் மூடப்படுவதற்கு நெகிழ்ச்சியாக வருத்தம் தெரிவிக்கும் நெல்லை மாணவி.

  • Last Updated :
  • Tirunelveli, India

கோயம்புத்தூரில் புத்தகம் வாசிப்பவர்களுக்கு முக்கிய நூலகமாக இருந்து வருகிறது தியாகு புக் சென்டர். தடாகம் சாலை ஆர்.எஸ்.புரத்தில் செயல்பட்டு வரும் இந்த நூலகம். ஏராளமானோருக்கு அறிவுப்பசிக்கு விருந்தளித்தது. நூலகமாகவும், புத்தகங்கள் விற்பனை செய்யும் கடையாகவும் விளங்குகிறது.

இங்கு அரிதான நூல்கள், ஆய்வு கட்டுரைகள், வரலாறு புத்தகங்கள், ஆங்கில நாவல்கள் உள்ளிட்ட ஏராளமான புத்தகங்கள் உள்ளன. அதுமட்டுமல்லாமல் குறைந்த விலையில் புத்தகங்கள் இங்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. 80 ஆயிரம் நூல்களைக் கொண்டது இந்த புக் சென்டர். இதன் உரிமையாளர் தியாகராஜன்.

1960ல் இந்த புக் சென்டர் சிறிய கடையாக தொடங்கப்பட்டது.

வருத்தம் தெரிவிக்கும் நெல்லை மாணவி

கடந்த 64 ஆண்டுகளாக சிறப்பாக இயங்கி வந்த இந்த புக் சென்டர் விரைவில் மூடப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாள் ஒன்றுக்கு 50 வாசகர்கள் வந்த நிலையில் கொரோனா காலகட்டத்திற்கு பின்பு வாசகர்களின் வருகை குறைந்ததால் இந்த நூலகம் மூடப்பட உள்ளதாக தெரிகிறது.

இதற்கு திருநெல்வேலியைச் சேர்ந்த மாணவியும் சிறார் எழுத்தாளருமான சூடாமணி தனது பேஸ்புக் பதிவில் வருத்தம் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், நூற்றுக்கணக்கான புத்தகங்கள் அனாதியாக போகின்றன. ஆனந்தமாய் சிரிப்போம் வாருங்கள் என வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.

64 வருட உழைப்பு வீணாகப் போகிறது. வாங்க வீண் வம்பு பேசுவோம் என குறிப்பிட்டுள்ளார். மேலும், கோவையில் நூலகம் மூடப்படுவது வருத்தம் அளிக்கிறது. ஒரு நூலகம் திறக்கப்பட்டால் ஆயிரம் சிறைச்சாலைகள் மூடப்படும். ஒரு நூலகம் மூடப்பட்டால் அதன் விளைவு என்ன என நினைக்கும்போது மனது வலிக்கிறது. அந்த நூலகத்தை மீட்டெடுக்க உங்கள் கைகளை தாருங்கள் என அவர் வருத்தத்துடன் பதிவிட்டுள்ளார்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

top videos

    இந்த மாணவி தற்போது ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார். அம்மாவை தேடி, ஏன் எப்படி எப்போது என்ற இரண்டு சிறுகதை தொகுப்புகளை படைத்துள்ளார். அது மட்டுமல்லாமல் மிருகதேசம் என்ற குருநாவலை எழுதியுள்ளார். மேலும், பாரதி பைந்தமிழ் சுடர், பொதிகை தமிழ் சுடர் உள்ளிட்ட பல விருதுகளை வாங்கி குவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    First published:

    Tags: Local News, Tirunelveli