முகப்பு /திருநெல்வேலி /

நெல்லையில் மாநில அளவில் மாற்றுத்திறனாளிகளுக்கான வாலிபால் போட்டி.. சாம்பியன் யார் தெரியுமா?

நெல்லையில் மாநில அளவில் மாற்றுத்திறனாளிகளுக்கான வாலிபால் போட்டி.. சாம்பியன் யார் தெரியுமா?

X
மாற்றுத்திறனாளிகளுக்கான

மாற்றுத்திறனாளிகளுக்கான வாலிபால் போட்டி கோயம்புத்தூர் அணியை வீழ்த்தி ய கன

State level Volley ball match | மாநில அளவில் மாற்றுத்திறனாளிகளுக்கான வாலிபால் போட்டி இறுதி போட்டியில்2-1   என்ற கணக்கில் கோயம்புத்தூர் அணியை வீழ்த்தி கன்னியாகுமரி அணி வெற்றி பெற்றது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tirunelveli, India

திருநெல்வேலி சென்ட்ரல் ரோட்டரி கிளப்பும் நாங்குநேரி அடுத்த சூரன் குடி கிறிஸ்டோபர் ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸ் கலைக் கல்லூரியும் இணைந்து தென்னிந்திய அளவில் மகளிர் காண வாலிபால் போட்டியும் மாநில அளவில் மாற்றுத்திறனாளிகளுக்கான வாலிபால் போட்டியை நடத்தியது.

பாளையங்கோட்டை வ உ சி மைதானத்தில் தொடங்கிய இந்த போட்டியை கல்லூரி தலைவர் பிரவீன் கிறிஸ்டோபர் தொடங்கி வைத்து சிறப்பித்தார். 17 அணிகள் கலந்து கொண்ட தொடரில் மொத்தமாக 28 ஆட்டங்கள் நடைபெற்றன.

மாநில அளவில் மாற்றுத்திறனாளிகளுக்கான வாலிபால் போட்டியில் ஏ பிரிவில் கோயம்புத்தூர்,தூத்துக்குடி,மதுரை விருதுநகர்,தென்காசி அணிகளும் பி பிரிவில் கன்னியாகுமரி நீலகிரி, புதுக்கோட்டை, திருநெல்வேலி 2 அணிகளும் சி பிரிவில் ராமநாதபுரம், திருநெல்வேலி,திருச்சி,தேனி அணிகளும் டி பிரிவில் கிருஷ்ணகிரி,சென்னை, சிவகாசி டிஎஸ்கே அணிகளும் இடம் பெற்றன.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

அதேபோல் தென்னிந்திய அளவில் பெண்களுக்கான வாலிபால் போட்டியில் தமிழ்நாடு போலீஸ் ஜிகேஎம் சென்னை ஜோசப் காலேஜ் அல்போன்சா காலேஜ்  உள்ளிட்ட அணிகள் இடம்பெற்றன. இந்நிலையில் மாநில அளவில் மாற்றுத்திறனாளிகளுக்கான வாலிபால் போட்டி இறுதி போட்டியில்2-1   என்ற கணக்கில் கோயம்புத்தூர் அணியை வீழ்த்தி கன்னியாகுமரி அணி வெற்றி பெற்றது.

First published:

Tags: Local News, Tirunelveli