முகப்பு /திருநெல்வேலி /

உதயநிதியின் ‘கண்ணை நம்பாதே’ படம் சொல்லும் மெசேஜ் என்ன? - நெல்லை மக்களின் ரிவ்யூ கேளுங்க..

உதயநிதியின் ‘கண்ணை நம்பாதே’ படம் சொல்லும் மெசேஜ் என்ன? - நெல்லை மக்களின் ரிவ்யூ கேளுங்க..

X
உதயநிதியின்

உதயநிதியின் ‘கண்ணை நம்பாதே’

Kannai Nambathey Review : உதயநிதி ஸ்டாலின் நடித்த கண்ணை நம்பாதே படம் எப்படி இருக்கிறது என்பது பற்றி திருநெல்வேலி மாவட்ட ரசிகர்கள் கூறும் திரை விமர்சனம்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tirunelveli, India

கடந்த 2018ம் ஆண்டு அருள்நிதி நடிப்பில் வெளியான சஸ்பென்ஸ் த்ரில்லர் படமான 'இரவுக்கு ஆயிரம் கண்கள்' படத்தை இயக்கிய இயக்குநர் மு.மாறன் கண்ணை நம்பாதே படத்தை இயக்கியுள்ளார். உதயநிதி ஸ்டாலின், ஸ்ரீகாந்த், பிரசன்னா, ஆத்மிகா, பூமிகா, சதீஷ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ள கண்ணை நம்பாதே படத்திற்கு, சித்து குமார் இசையமைத்துள்ளார்.

கிரைம், த்ரில்லர் ஜானெரில் உருவாகியுள்ள இந்த படத்தின் ட்ரைலர் ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றது. முழுக்க முழுக்க சஸ்பென்ஸுடன் எடுக்கப்பட்டுள்ள இந்த படம் மார்ச் 17 திரையரங்கில் வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது.

நெல்லையில் ரசிகர்கள் வைத்த பேனர்

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பிரபல திரையரங்கில் இப்படம் வெளியிடப்பட்டது. படம் முடிந்து வெளியே வந்த ரசிகர்கள் கூறுகையில், “இது ஒரு சிறப்பான க்ரைம் திரில்லர் படம், இதன் திரைக்கதை இதன் மற்றொரு ப்ளஸ் ஆகும். மற்ற நடிகர்கள் அவர்களுக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தில் நியாமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். ஆழமான திரைக்கதையை கொண்ட இப்படத்தில், எதிர்பாராத திருப்புமுனைகள் ஆங்காங்கே வருகிறது. நல்ல கதையை உதயநிதி தேர்வு செய்துள்ளார். துணை கதாபாத்திரங்களும் நன்றாக நடித்துள்ளனர்” என தெரிவித்தனர்.

First published:

Tags: Cinema, Local News, Tirunelveli, Udhayanidhi Stalin