முகப்பு /திருநெல்வேலி /

இளநிலை மறுவாழ்வு அலுவலர் பணிக்கான தேர்வு.. நெல்லையில் நாளை கூடுதல் பேருந்துகள் ஏற்பாடு!

இளநிலை மறுவாழ்வு அலுவலர் பணிக்கான தேர்வு.. நெல்லையில் நாளை கூடுதல் பேருந்துகள் ஏற்பாடு!

மாதிரி படம்

மாதிரி படம்

Tirunelveli District News | திருநெல்வேலியில் இளநிலை மறுவாழ்வு அலுவலர் பணிக்கான எழுத்துத் தேர்வு நாளை நடைபெற இருப்பதால் கூடுதல் பேருந்து இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

  • Last Updated :
  • Tirunelveli, India

திருநெல்வேலி மாவட்டம் திடியூர் பிஎஸ்என் பொறியியல் கல்லூரியில் நாளை (சனிக்கிழமை) மாற்றுத்திறனாளிகள் நலத்துறையில் இளநிலை மறுவாழ்வு அலுவலர் பணிக்கான கணினி வழி தேர்வு நடைபெற உள்ளது.

இதுதொடர்பாக நெல்லை மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், “தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் தமிழ்நாடு சார்நிலைப் பணிகளில் அடங்கிய மாற்றுத் திறனாளிகள் நலத்துறையில் இளநிலை மறுவாழ்வு அலுவலர் பணிக்கான கணினி வழி தேர்வு ஏப்ரல் ஒன்றாம் தேதி முற்பகல் மற்றும் பிற்பகலில் நடைபெற உள்ளது.

இந்த போட்டித் தேர்வினை 36 பேர் எழுத உள்ளனர். தேர்வு நாளன்று தேர்வு மையத்திற்கு கூடுதல் பேருந்துகளை இயக்கவும் காவல்துறை மூலம் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்திடவும் தேர்வு மையத்தின் அருகில் நிபுணத்துவம் பெற்ற மருத்துவ குழுக்கள் 108 ஆம்புலன்ஸை தயார் நிலையில் வைத்திடவும் சுகாதாரத் துறையின் மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

தேர்வு நாள் அன்று தடையில்லா மின்சாரம் வசதியை செய்து கொடுக்க மின்சாரத்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. தேர்வு எழுதுவோர் தங்களின் தேர்வு மையங்களை முன்கூட்டியே கண்டறிந்து தேர்வு எழுத வருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். தேர்வு, அறையினுள் கைபேசி எடுத்துச் செல்ல அனுமதி கிடையாது தேர்வு எழுதுபவர்கள் தவிர இதர நபர்கள் தேர்வு மைய வளாகத்திற்குள் செல்ல அனுமதி கிடையாது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

First published:

Tags: Local News, Tirunelveli