திருநெல்வேலி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் சார்பில் சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் 19ஆம் தேதி காலை 10:30 மணிக்கு மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலகத்தில் நடைபெற உள்ளது.
இந்த வேலை வாய்ப்பு முகாமில் பங்கேற்க விருப்பமுள்ளவர்கள் தங்களது கல்வி சான்று மற்றும் இதர சான்றுகளுடன் பங்கேற்ற பயனடையலாம். இம்முகாமில் பணி நியமனம் பெறும் பதிவு தாரர்கள் உடைய வேலை வாய்ப்பு பதிவு மூப்பு ரத்து செய்யப்பட மாட்டாது முகாமில் கலந்து கொள்ள விரும்பும் வேலை நாடுனர்கள் மற்றும் பங்கேற்க விருப்பம் உள்ள தனியார் நிறுவனங்கள் www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் தங்களுடைய விவரங்களை பதிவு செய்ய வேண்டும்.
வேலை வாய்ப்பு தொடர்பான பல்வேறு தகவல்களை பெறவும் முகாமில் கலந்து கொள்ளும் நிறுவனங்கள் குறித்து அறியவும் NELLAI EMPLOYMENT OFFICE என்ற டெலிகிராம் சேனலில் இணைந்து பயன்பெறலாம்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
மேலும் போட்டி தேர்வுகளுக்கு தயார் செய்யும் மாணவர்கள் WWW.Tamilnaducareerservices.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்து அனைத்து போட்டி தேர்வுகளுக்கான பாட குறிப்புகளை இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் உதவி இயக்குனர் மரிய சகாய ஆண்டனி செய்திவெளியிட்டுள்ளார்...
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Private Jobs, Tirunelveli