திருநெல்வேலியில் பிரபல தனியார் கம்பெனிகள் பங்கேற்கும் வேலை வாய்ப்பு முகாம் நாங்குநேரி அடுத்த வாகைகுளம் அருள்மிகு பன்னிருபிடிஅய்யன்கலை மற்றும் அறிவியல் கல்லூரியில்நடைபெறுகிறது.
இந்த வேலை வாய்ப்பு முகாமை கல்லூரி நிர்வாகம் நடத்துகின்றது. ஏற்கனவே இது போன்ற வேலைவாய்ப்பு முகாம்களை இந்த கல்லூரி நிர்வாகம் நடத்தியுள்ளது. அந்த வரிசையில்வரும் 11 ஆம் தேதி (நாளை) செவ்வாய்க்கிழமை காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறுகிறது.
இவ் வேலை வாய்ப்பு முகாமில் பல முன்னணி கம்பெனிகள் கலந்துகொண்டு ஆட்களை தேர்வு செய்ய உள்ளனர். இந்த கல்லூரியை சேர்ந்த மாணவ மாணவிகள் இந்த வேலை வாய்ப்பு முகாமில் கலந்து கொள்ள உள்ளனர்.
மேலும், இந்த வேலை வாய்ப்பு முகாமில் 2020, 21, 22 ஆம் ஆண்டு அனைத்து துறையிலும் டிகிரி முடித்து பட்டம் பெற்ற மற்ற கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவ மாணவிகள் மற்றும் தற்போது இறுதி ஆண்டு படிக்கக்கூடிய மாணவ மாணவிகள் பங்கேற்று பயன்பெறலாம் எனவும் இந்த கல்லூரி நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கல்லூரி நிர்வாகத்தை தொடர்பு கொள்ள 75982 19947,97870 08055. ஆகிய தொலைபேசி எண்களில் அழைத்து கூடுதல் தகவல்களை தெரிந்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Job Fair, Local News, Nellai