முகப்பு /திருநெல்வேலி /

நெல்லையில் ஜமாபந்தி எந்த தேதியில் நடக்கிறது தெரியுமா?

நெல்லையில் ஜமாபந்தி எந்த தேதியில் நடக்கிறது தெரியுமா?

மாதிரி படம்

மாதிரி படம்

Jamabandi in Nellai : திருநெல்வேலி மாவட்டத்தில் வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) இம்மாதம் தொடங்குகிறது.

  • Last Updated :
  • Tirunelveli, India

திருநெல்வேலி மாவட்டத்தில் மே 24ல் ஜமாபந்தி தொடங்குகிறது.

இதுகுறித்து திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் வெளியிட்ட செய்திகுறிப்பில், “திருநெல்வேலி மாவட்டத்தில் 1432ம் பசலி ஆண்டுக்குரிய வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) பாளையங்கோட்டை, சேரன்மகாதேவி, திசையன்விளை, அம்பாசமுத்திரம், திருநெல்வேலி ஆகிய வட்டங்களில் நடைபெறவுள்ளது.

பாளையங்கோட்டை வட்டத்தில் மேலப்பாட்டம் குறுவட்டத்துக்கு இம் மாதம் 24, 25 ஆம் தேதிகளிலும் முன்னீர்பள்ளத்துக்கு 26, 30 ஆம் தேதிகளிலும், சிவந்திப்பட்டிக்கு 31 ஆம் தேதியும், பாளையங்கோட்டைக்கு ஜுன் 1, 2, 6 ஆம் தேதிகளிலும் ஜமாபந்தி நடைபெறுகிறது. சேரன்மகாதேவி வட்டத்தில் மேலச்செவல் குறுவட்டத்துக்கு 24, 25, 26 ஆம் தேதிகளிலும், முக்கூடலுக்கு 30, 31 ஆம் தேதிகளிலும், சேரன்மகாதேவிக்கு ஜுன் 1, 2 ஆம் தேதிகளிலும் ஜமாபந்தி நடைபெறவுள்ளது.

இதையும் படிங்க : HCL Tech தொழில்நுட்ப நிறுவனத்தில் பணிபுரிய ஓர் அரிய வாய்ப்பு..!

திசையன்விளை வட்டத்தில் விஜயநாராயணம் குறுவட்டத்தில் விஜயநாராயணம் குறுவட்டத்துக்கு இம்மாதம் 24, 25 ஆம் தேதிகளிலும், திசையன்விளைக்கு 25, 26 ஆம் தேதிகளிலும் ஜமாபந்தி நடைபெறவுள்ளது. நாங்குனேரி வட்டத்தில், களக்காடு குறுவட்டத்துக்கு, களக்காடு குறுவட்டத்துக்கு இம்மாதம் 24, 25 ஆம் தேதிகளிலும், ஏர்வாடிக்கு 26, 30, 31 ஆம் தேதிகளிலும், பூலத்துக்கு 31, ஜுன் 1 ஆம் தேதிகளிலும், மூலைக்கரைப்பட்டிக்கு ஜுன் 1, 2 ஆம் தேதிகளிலும், நான்குனேரிக்கு ஜுன் 2, 6, 7 ஆம் தேதிகளிலும் ஜமாபந்தி நடைபெறவுள்ளது.

ராதாபுரம் வட்டத்தில் லெவிஞ்சிபுரம் குறுவட்டத்துக்கு இம்மாதம் 24 ஆம் தேதியும், சமூகரெங்கபுரத்துக்கு 24, 25 ஆம் தேதிகளிலும், பழவூருக்கு 25, 26 ஆம் தேதிகளிலும், பழவூருக்கு 25, 26 ஆம் தேதிகளிலும், பணகுடிக்கு 26, 30 ஆம் தேதிகளிலும், வள்ளியூருக்கு 30 ஆம் தேதியும், ராதாபுரத்துக்கு 31 ஆம் தேதியும் ஜமாபந்தி நடைபெறுகிறது. மானூர் வட்டத்தில் தாழையூத்து குறுவட்டத்துக்கு இம்மாதம் 24, 25 ஆம் தேதிகளிலும் மானூருக்கு 25, 26,30 ஆம் தேதிகளிலும், வன்னிக்கோனேந்தலுக்கு 30, 31 ஆம் தேதிகளிலும் ஜமாபந்தி நடைபெறுகிறது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

top videos

    அம்பாசமுத்திரம் வட்டத்தில் சிங்கம்பட்டி குறுவட்டத்துக்கு இம்மாதம் 24, 25, 26 ஆம் தேதிகளிலும் அம்பாசமுத்திரத்துக்கு 26, 30, 31 ஆம் தேதிகளிலும் ஜமாபந்தி நடைபெறுகிறது. திருநெல்வேலி வட்டத்தில் மதவக்குறிச்சி குறுவட்டத்துக்கு இம்மாதம் 24, 25 ஆம் தேதிகளிலும், நாரணம்மாள்புரத்துக்கு 25, 30, 31 ஆம் தேதிகளிலும், திருநெல்வேலிக்கு 31, 1, 2, 6 ஆம் தேதிகளிலும் கங்கைகொண்டானுக்கு இம்மாதம் 6, 7 ஆம் தேதிகளிலும் ஜமாபந்தி நடைபெறுகிறது. இந்த நாள்களில் பொதுமக்கள் உரிய மனுக்களை அளித்து தீர்வு பெறலாம்” என செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    First published:

    Tags: Local News, Tirunelveli