முகப்பு /திருநெல்வேலி /

இன்று (ஏப்ரல் 13) சுதந்திரப் போராட்டத்தின் போக்கையே மாற்றிய தினம் - பாளையங்கோட்டை பேராசிரியர் விளக்கம்!

இன்று (ஏப்ரல் 13) சுதந்திரப் போராட்டத்தின் போக்கையே மாற்றிய தினம் - பாளையங்கோட்டை பேராசிரியர் விளக்கம்!

X
சுதந்திர

சுதந்திர போராட்டம்

Freedom Struggle : இன்று (ஏப்ரல் 13ம் தேதி) சுதந்திரப் போராட்டத்தின் போக்கையே மாற்றிய தினம் பற்றி திருநெல்வேலி பாளையங்கோட்டையை சேர்ந்த பேராசிரியர் விளக்குகிறார்.

  • Last Updated :
  • Tirunelveli, India

1919ம் ஆண்டு ஏப்ரல் 13ம் தேதி பஞ்சாபின் அமிர்தசரஸ் மாவட்டத்தில் அமைந்துள்ள ஜாலியன் வாலாபாக் என்ற பூங்காவில், ஆங்கிலேயர்களின் துப்பாக்கிச் சூட்டில் பலர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாட்டின் சுதந்திரப் போராட்டத்தின் போக்கையே மாற்றியது. இதுகுறித்து பாளையங்கோட்டை சேவியர் கல்லூரியின் பேராசிரியர் அல்போன்சா நம்மிடம் பல்வேறு தகவல்களை பகிர்ந்து கொண்டார்.

ஆங்கிலேயர்களின் அடக்குமுறை :

இதுகுறித்து அவர் கூறுகையில், “1919ம் ஆண்டு ஏப்ரல் 13ம் தேதி அமிர்தசரஸில் உள்ள ஜாலியன் வாலாபாக்கில் ஆங்கிலேயர்களின் அடக்குமுறை கொள்கை மற்றும் ரவுலட் சட்டம் உள்ளிட்ட பல பிரச்சனைகளுக்கு எதிராக மக்கள் கூடினர். ஊரடங்கு உத்தரவு அமலையும் மீறி ஆயிரக்கணக்கான மக்கள் கூட்டத்தில் கலந்துகொள்ள ஜாலியன் வாலாபாக் சென்றனர்.

சீறிப்பாய்ந்த குண்டுகள் :

கூட்டத்தில் தலைவர்கள் உரை நிகழ்த்திக் கொண்டிருந்தபோது, ​​பிரிகேடியர் ஜெனரல் ரெஜினோல்ட் டயர், ராணுவ வீரர்கள் ஜாலியன் வாலாபாக் சென்று அங்கு துப்பாக்கிச் சூடு நடத்த உத்தரவிட்டார். 90 பிரிட்டிஷ் வீரர்கள் முன்னறிவிப்பின்றி ஆயிரக்கணக்கான மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். ‘ஜாலியன் வாலாபாக்கில் ஆங்கிலேயர்கள் 10 நிமிடங்களில் மொத்தம் 1650 தோட்டாக்கள் பாய்ந்ததாக தெரிகிறது. ஜாலியன் வாலாபாக்கில் இருந்த மக்கள் வெளியே வரமுடியவில்லை.

இதையும் படிங்க : சாட்டையடி வாங்கிய பக்தர்கள்.. நாமக்கல் சீராப்பள்ளி மாரியம்மன் கோவிலில் வினோத நேர்த்திக்கடன்!

வீர மரணமடைந்த மக்கள் :

ஏனெனில் பூங்காவில் இருந்து வெளியேற ஒரே ஒரு வழி மட்டுமே இருந்தது. அங்கு ஆங்கிலேயர்கள் நின்று கொண்டிருந்தனர். துப்பாக்கிச் சூட்டை தவிர்க்க மக்கள் கிணற்றில் குதித்தனர். இச்சம்பவத்தில் கூட்ட நெல்சலிலும் கிணற்றில் குதித்தும் பெண்கள் குழந்தைகள் என ஏராளமானோர் உயிரிழந்தனர். ஜாலியன் வாலாபாக்கில் வீரமரணம் அடைந்தவர்களின் சரியான எண்ணிக்கை இன்னும் தெரியவில்லை.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

மன்னிப்பு கோரிய இங்கிலாந்து அரசு :

top videos

    ஜாலியன் வாலாபாக்கில் 388 தியாகிகளின் பட்டியல் உள்ளது. அதே நேரத்தில், பிரிட்டிஷ் அரசாங்கத்தின் ஆவணங்களில் 379 பேர் இறந்ததாகவும், 200 பேர் காயமடைந்ததாகவும் கூறப்பட்டுள்ளது. இதன் பிறகு சுதந்திரப் போராட்டத்தின் போக்கே மாறியது. மேலும் 2019ம் ஆண்டு இங்கிலாந்து அரசு இந்த சம்பவத்திற்காக மன்னிப்பு கோரியது” என அவர் தெரிவித்தார்.

    First published:

    Tags: England, India, Local News, Tirunelveli