திருநெல்வேலியில் நடைபெறும் 6வது புத்தக திருவிழாவில் மாவட்டத்திலுள்ள சிறை நூலகம், அரசுப் பள்ளிக்கூட நூலகங்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு பள்ளிகளின் நூலகங்கள் ஆகியவற்றிற்கு புதிய புத்தகங்களை நன்கொடையாக வழங்கும் ”புத்தகப் பாலம்” என்ற திட்டம் அறிமுகபடுத்தப்பட்டுள்ளது.
நன்கொடை அளிக்க வழிகள் :
நன்கொடையினை, மாவட்ட அளவிலான பொது நிதிக்கு அளிக்கலாம் அல்லது தாங்கள் விரும்பும் தனிப்பட்ட நூலகத்தை நீங்களே தேர்வு செய்தும் நன்கொடையினை அளிக்கலாம். தாங்கள் அளிக்கும் நன்கொடை விவரத்தையும் இணையதளத்தில் https://nellaibookfair.in/ குறிப்பிட வேண்டும். QR Code, Net Banking, Debit Card, Credit Card, UPI Payment போன்ற இணைய வழியில் பணம் செலுத்தும் ஏதேனும் ஒரு முறையில் தங்கள் நன்கொடையினை செலுத்தலாம் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மேலும், பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கான புத்தகங்கள், நெல்லை மண் சார்ந்த புத்தகங்கள், சிறுவர் இலக்கியங்கள், சுய முன்னேற்ற நூல்கள் என 10க்கும் மேற்பட்ட பிரிவுகளில் புத்தகங்களை வாங்கி நூலகங்களுக்கு வழங்கப்படும். இந்த முயற்சியானது புத்தகங்கள் தேவைப்படும் நூலகங்களையும், நன் கொடை அளிப்பவர்களையும், புத்தக விற்பனையாளர்களையும் இணைக்கும் பாலமாக செயல்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Read More : 21 பைக்.. ரூ.6 லட்சம் மதிப்பு.. ஜெயங்கொண்டத்தில் சிக்கிய பலே திருடன்
சிறை கைதிகளுக்கு..
வ.உ.சி. மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள புத்தகத் திருவிழாவில் 13வது ஸ்டாலில் வைக்கப்பட்டுள்ள பெட்டியில் புத்தகங்களை வழங்கினால் மாவட்ட நிர்வாகத்தின் சிறை நூலகத்திற்கு புத்தகங்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன. மாவட்ட நிர்வாகத்தின் இணையதளத்திலும் நன்கொடை அளிக்கலாம் அந்த நன்கொடையும் புத்தகங்களாக வாங்கப்பட்டு சிறை நூலகத்திற்கு அனுப்பி வைக்கப்படுகின்றன இந்த புத்தகத் திருவிழா வரும் 7ம் தேதி வரை நடைபெறுகிறது பல்வேறு தரப்பினர் புத்தகங்களை வழங்கி வருகின்றனர். மேலும் பல புத்தகங்களை சிறை நூலகத்திற்கு வழங்குமாறு அதன் நிர்வாகத்தினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Tirunelveli