தமிழ்நாடு பட்ஜெட்டில் திருநெல்வேலியில் ஐடி பார்க் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அப்பகுதி இளைஞர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2023-24ஆம் நிதி ஆண்டுக்கான பட்ஜெடை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கடந்த 20ஆம் தேதி தாக்கல் செய்தார். இதில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மகளிர் உரிமைத் தொகை, பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு விரிவாக்கத் திட்டம் உள்ளிட்ட அறிவிப்புகள் வெளியானது. சென்னையில் முதன்முறையாக டைட்டில் பூங்காவை நிறுவி தகவல் தொழில்நுட்ப புரட்சிக்கு வித்திட்டவர் முன்னாள் முதல்வர் கருணாநிதி.
இத்துறையின் வளர்ச்சி தமிழ்நாட்டின் அனைத்து பகுதிகளுக்கும் பயன் அளித்திட வேண்டும் என்ற நோக்கில் ஏழு மாவட்டங்களில் நியோ டைட்டில் பூங்காக்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதன் நீட்சியாக ஈரோடு செங்கல்பட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. அது மட்டும் இல்லாமல் திருநெல்வேலியில் ஒரு லட்சம் சதுர அடி கட்டட பரப்பளவில் தகவல் தொழில்நுட்ப பூங்காக்கள் அமைக்கப்பட உள்ளது. இதன் மூலம் சுமார் நான்கு ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
இந்நிலையில் திருநெல்வேலியில் தகவல் தொழில்நுட்ப பூங்கா அமைப்பதற்கான அறிவிப்பு மகிழ்ச்சி அளிப்பதாக இளைஞர்கள் தெரிவித்துள்ளனர். இது குறித்து பேசிய இளைஞர்கள் சட்டப்பேரவையில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் திருநெல்வேலியில் தொழில்நுட்ப பூங்கா அமைக்கப்படும் என பட்ஜெட்டில் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. இதன் மூலம் பலருக்கு வேலை வாய்ப்பு வழங்கப்பட இருப்பதால், இந்த அறிவிப்பை விரைவில் அமல்படுத்த வேண்டும். அதற்கான வேலைகளை விரைவில் தொடங்கி இளைஞர்களின் வேலைவாய்ப்பை உறுதி செய்ய வேண்டும் என்று அவர்கள் கூறினர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Tirunelveli