முகப்பு /செய்தி /திருநெல்வேலி / நியூஸ் 18 தமிழ்நாடு செய்தி எதிரொலி... தாமிரபரணியில் கழிவுநீர் கலக்கும் பகுதிகளில் கோட்டாட்சியர் ஆய்வு..!

நியூஸ் 18 தமிழ்நாடு செய்தி எதிரொலி... தாமிரபரணியில் கழிவுநீர் கலக்கும் பகுதிகளில் கோட்டாட்சியர் ஆய்வு..!

தாமிரப்பரணி ஆறு

தாமிரப்பரணி ஆறு

தாமிரபரணியில் கழிவுநீர் கலப்பதை தடுப்பதற்கான நடவடிக்கைகள் விரைவில் எடுக்கப்படும் என கோட்டாட்சியர் உறுதி.

  • Last Updated :
  • Tirunelveli, India

தாமிரபரணியில் கழிவு நீர் கலப்பது தொடர்பாக நியூஸ் 18 தொடர்ந்து செய்திகளை வெளியிட்டு வந்த நிலையில், அது பற்றி ஆய்வு செய்த கோட்டாட்சியர் அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்யப்படும் என அறிவித்துள்ளார்.

நியூஸ் 18 தமிழ்நாடு செய்தி எதிரொலியால், தாமிரபரணியில் கழிவுநீர் கலக்கும் இடங்களில் திருநெல்வேலி கோட்டாட்சியர் சந்திரசேகரன் ஆய்வு மேற்கொண்டார். இதுதொடர்பாக அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்யப்படும் எனவும் கூறினார்.மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியின் பூங்குளத்தில் உற்பத்தியாகும் தாமிரபரணி ஆற்றில் கழிவுநீர் கலக்கப்படுவதால் ஆறு மாசடைந்து வருகிறது.

இதையும் படிங்க: வெள்ளத்தில் சென்ற ரூ.2.5 கோடி மதிப்பிலான தங்க நகைகள்... பெங்களூருவில் அதிர்ச்சி..!

 பாபநாசம் பகுதியில் மட்டுமே தாமிரபரணி ஆறு, குளிக்கவும், குடிக்கவும் பயன்படுத்தும் வகையில் உள்ளது. அதை கடந்து அம்பாசமுத்திரம், திருநெல்வேலியில் ஆற்று நீரை பயன்படுத்த முடியாத நிலை நீடித்து வருகிறது.

தாமிரபரணி ஆற்றில் கழிவுநீர் கலப்பதை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என செய்தி ஒளிபரப்பானதை அடுத்து, ஆற்றுப்பகுதியில் கழிவுநீர் கலக்கும் இடங்களில் கோட்டாட்சியர் சந்திரசேகரன் ஆய்வு நடத்தினார். மேலப்பாளையம், வண்ணாரப்பேட்டை, மீனாட்சிபுரம், சிந்து பூந்துறை உள்ளிட்ட இடங்களில் ஆய்வு மேற்கொண்டார்.கழிவுநீர் கலப்பதை தடுப்பதற்கான நடவடிக்கைகள் விரைவில் எடுக்கப்படும் என்றும் சந்திரசேகரன் தெரிவித்தார்.

First published:

Tags: Thamirabarani, Tirunelveli