முகப்பு /திருநெல்வேலி /

சர்வதேச அருங்காட்சியக தினம்.. நெல்லையில் அட்டகாசமான நிகழ்ச்சிகள் நடத்த திட்டம்!

சர்வதேச அருங்காட்சியக தினம்.. நெல்லையில் அட்டகாசமான நிகழ்ச்சிகள் நடத்த திட்டம்!

மாதிரி படம்

மாதிரி படம்

Nellai museum day | விருப்பமுள்ளவர்கள் அலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு கலந்து கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • Last Updated :
  • Tirunelveli, India

நெல்லையில் சர்வதேச அருங்காட்சியக தினத்தை அடுத்து மே 18 முதல் 21ம் தேதி வரை பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

சர்வதேச அருங்காட்சியக தின நிகழ்ச்சி குறித்து மாவட்ட அறிவியல் மையம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், திருநெல்வேலி சர்வதேச அருங்காட்சியக தினத்தை (International Museum Day) 2023 முன்னிட்டு வருகின்ற மே 18 முதல் 21ம் தேதி வரை பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்த திட்டமிட்டுள்ளது.

இதில் மே 18 ம் தேதி தொடங்கி 4 நாட்கள்'எனது கலைப்பொருட்கள் சேகரிப்பு' என்ற தலைப்பில் கண்காட்சியும், மே 20ம் தேதி சனிக்கிழமை காலை 10.30 மணிக்கு 6 மற்றும் 7ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு 'அருங்காட்சியக ஓவியத்தில் வர்ணம் தீட்டுதல்' போட்டியும் நடைபெற உள்ளது. அதனைத் தொடர்ந்து காலை 11.30 மணிக்கு 'அருங்காட்சியங்களின் வரலாறு' என்ற தலைப்பில் பொதுமக்களுக்கான பணிமனையும், மே 21 ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 11.30 மணிக்கு பொதுமக்களுக்கான 'அருங்காட்சியங்களையும் அதன் இடங்களையும் சரியாகப் பொருத்துதல் ' என்ற திறந்த வெளி போட்டியும், மாலை 03.30 மணிக்கு நிறைவு விழாவும் நடைபெறவிருக்கிறது.

இதையும் படிங்க | போட்டி தேர்வுக்கு தயாராகுறீங்களா? நெல்லையில் இலவச பயிற்சி.. மிஸ் பண்ணிடாதீங்க!

அனுமதி இலவசம். இதற்கு விருப்பம், தகுதியுடையவர்கள் பங்கேற்று பயன்பெற அன்புடன் அழைக்கிறோம். மேலும் விபரங்களுக்கு 94429 94797 (whatsapp) என்ற எண் அல்லது sciencecentrenellaiednprog@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும் என மாவட்ட அறிவியல் மையம் அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.

top videos

    உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

    First published:

    Tags: Local News, Tirunelveli