முகப்பு /திருநெல்வேலி /

போதைப்பொருள் கடத்தல் தடுப்பு நடவடிக்கை : நெல்லை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆலோசனை

போதைப்பொருள் கடத்தல் தடுப்பு நடவடிக்கை : நெல்லை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆலோசனை

மாவட்ட காவல் கண்காணிப்பாளர்

மாவட்ட காவல் கண்காணிப்பாளர்

Tirunelveli District | திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மாதாந்திர ஆய்வு கூட்டம் நடந்தது.

  • Last Updated :
  • Tirunelveli, India

திருநெல்வேலியில் நடைபெற்ற மாதாந்திர ஆய்வுக்கூட்டத்தில் போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கைகள் எடுப்பது குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆலோசனை நடத்தினார்.

திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மாதாந்திர ஆய்வு கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்திற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிலம்பரசன் தலைமை தாங்கினார்.

தொடர்ந்து அவர், குற்ற வழக்குகளின் புலன் விசாரணை குறித்தும், நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்தும், போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கைகள் எடுப்பது குறித்தும் ஆய்வு செய்து, விசாரணை அதிகாரிகளுக்கு உரிய ஆலோசனைகளை வழங்கினார்.

மேலும், குற்ற வழங்குகளில் சிறப்பாக செயல்பட்டு புலன் விசாரணை நடத்திய போலீசாருக்கு பாராட்டு தெரிவித்து சான்றிதழ் வழங்கினார். இந்த கூட்டத்தில் துணை காவல் கண்காணிப்பாளர் ஆனந்த ராஜ் (நெல்லை புறநகர்), யோகேஷ்குமார் (வள்ளியூர்), ராம கிருஷ்ணன் (சேரன்மாதேவி), ராஜு (நாங்குநேரி), வெங்க டேஷ் (அம்பை-பொறுப்பு) மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

முன்னதாக அயுதப்படை மைதானத்தில் மாவட்ட காவல் துறைக்கு சொந்தமான வாகனங்களை காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசன் ஆய்வு செய்தார். அப்போது வாகனங்களை உரிய முறையில் பராமரிக்க வேண்டும் என்று சம்பந்தப்பட்ட போலீசாருக்கு அறிவுறுத்தினார்.

அப்போது ஆயுதப்படை துணை காவல் கண்காணிப்பாளர் சுப்பிரமணியன், இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி மற்றும் போலீசார் உடன் இருந்தனர்.

First published:

Tags: Local News, Tirunelveli