முகப்பு /திருநெல்வேலி /

போட்டி தேர்வுக்கு தயாராகுறீங்களா? மத்திய பணியாளர்கள் தேர்வாணையம் அதிரடி அறிவிப்பு!

போட்டி தேர்வுக்கு தயாராகுறீங்களா? மத்திய பணியாளர்கள் தேர்வாணையம் அதிரடி அறிவிப்பு!

மாதிரி படம்

மாதிரி படம்

SSC announcement | மத்திய பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பை, திருநெல்வேலி மாவட்ட தேர்வர்கள் பயன்படுத்திக்கொள்ளுமாறு மாவட்ட நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

  • Last Updated :
  • Tirunelveli, India

மத்திய பணியாளர்கள் தேர்வாணையத்தால் நடத்தப்பட உள்ள ஒருங்கிணைந்த பட்டதாரி நிலையிலான தேர்வு 2023-ல் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள போட்டி தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து திருநெல்வேலி மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், மத்திய பணியாளர்கள் தேர்வாணையம் (Staff selection commission, Govt of India) ஒருங்கிணைந்த பட்டதாரி நிலையிலான தேர்வு 2023 தொடர்பான அறிவிப்பினை 03/04/2023 அன்று வெளியிட்டுள்ளது.

ஒன்றிய அரசின் பல்வேறு அமைச்சர்கள் துறைகள் நிறுவனங்கள் மற்றும் பல்வேறு அரசியலமைப்பு சார்ந்த அமைப்புகள் சட்டபூர்வ அமைப்புகள் தீர்ப்பாயங்கள் போன்றவற்றில் உள்ள குரூப் சி (Group C) மற்றும் குரூப் சி நிலையில் 7500 க்கு மேற்பட்ட பணி காலியிடங்களை அறிவித்துள்ளது. இத்தேர்வில் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள தகுதி உடைய விண்ணப்பதாரர்கள் அனைவரும் விண்ணப்பிக்கலாம்.

பணியிடங்களின் விவரம், வயதுவரம்பு, தேவையான கல்வி தகுதி,செலுத்த வேண்டிய கட்டணம், தேர்வு திட்டம் விண்ணப்பிக்கும் முறை போன்ற விவரங்கள் ஆள்சேர்ப்பு அறிவிப்பில் விரிவாக வழங்கப்பட்டுள்ளது. மேலும் இவ்விவரங்கள் https://ssc.nic.in/SSCFileServer/PortalManagement/UploadedFiles/notice_CGLE_03042023.pdf என்ற இணையதள முகவரியிலும் உள்ளது.

காலிப் பணியிடங்களுக்கு https://ssc.nic.in/ என்ற பணியாளர் தேர்வாணையத்தின் இணையதள வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும். கணினி அடிப்படையில் ஆன இத்தேர்வுக்கு உரிய கட்டணத்துடன் இனைய வழி யாக விண்ணப்பிக்க கடைசி நாள் 03.05.2023 மற்றும் ஆன்லைனில் கட்டணம் செலுத்துவதற்கான கடைசி நாள் 04.05.2023 ஆகும்.

தென் மண்டலத்தில் கணினி அடிப்படையில் ஆன தேர்வு ஜூலை 2023 இல் ஆந்திர பிரதேச மாநிலம் 10 மையங்களிலும் புதுச்சேரியில் ஒரு மையத்திலும் தமிழ்நாட்டில் ஏழு மையத்திலும் தெலுங்கானா மாநிலத்தில் மூன்று மையத்திலும் ஆக மொத்தம் 21 மையங்கள் நகரங்களில் நடைபெற உள்ளது.

தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையங்களில் செயல்படும் தன்னார்வ பயிலும் வட்டாரங்களில் பணியாளர் தேர்வாணைய போட்டி தேர்வுக்கான கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் நேரடியாக நடத்தப்பட உள்ளன.

இத்தேர்விற்கான பாடத்திட்டங்கள் மற்றும் பாடக்குறிப்புகள் தமிழ்நாடு அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை எண் மெய்நிகர் சுற்றல் இணையதளத்தில்  https://tamilnaducareerservices.tn.gov.in/Registration/vle_candidate_register  பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

மேலும்,இணையதளத்தில் TN Career Service Employment மற்றும் அண்ணா நிர்வாக பணியாளர் கல்லூரியின் AIM TN என்ற youtube சேனலில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள, தேர்விற்கான காணொளிகளை கண்டு பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

top videos

    எனவே தேர்விற்கு விண்ணப்பிக்க மற்றும் விண்ணப்பி விரும்பும் மாணவர்கள் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டு மையத்தில் தொடர்பு கொண்டு இப்ப பயிற்சி வகுப்புகளில் கலந்துகொண்டு பயனடிமாறு மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    First published:

    Tags: Central Government Jobs, Local News, SSC