பறவைகளை எவ்வாறு பார்க்க வேண்டும்? அதனை எவ்வாறு படம் வரைய வேண்டும்? என்பது குறித்து விலங்கின ஆர்வலர் கார்த்திகா விளக்கம் அளித்துள்ளார்.
திருநெல்வேலியை சேர்ந்த கார்த்திகா என்பவர் ATREE சுற்றுச்சூழல் ஆராய்ச்சி மையத்தின் கல்விப் பிரிவில் பணியாற்றி வருகிறார். இவர் கதை ஆசிரியர், ஓவியர் மற்றும் விலங்கின ஆர்வலரும் கூட. குழந்தைகளுக்காக பல கதைகளை எழுதியுள்ளார். குழந்தைகளுக்கு பிடித்த ஓவியங்களையும் இவர் வரைந்துள்ளார். விலங்கின ஆர்வலரான இவர் பறவைகளைப் பார்ப்பது நல்ல ஒரு பொழுதுபோக்கு என்கிறார்.
தொந்தரவு செய்யக்கூடாது :
இதுகுறித்து மேலும் அவர் கூறுகையில், “பறவைகள் என்பது உடல் முழுக்க இறகால் மூடப்பட்ட ஓர் அழகிய உயிரினம். பறவைகளில் குறிப்பாக நீர் நிலைகளில் வாழும் பறவைகள், மீன் கொத்திகள் உள்ளிட்ட பல்வேறு வகையான பறவைகள் உள்ளன. இத்தகைய பறவைகளைப் பார்க்க முக்கியமாக ஆர்வம் மட்டுமே போதும். இதற்கு பைனாக்குலர் போன்ற கருவிகள் எதுவுமே தேவையில்லை. வெறுமனே நமது கண்களால் மட்டும் பார்த்து ரசிக்க முடியும்.
அப்படியே, பறவைகளின் பெயர்களையும் அறிய ஆரம்பிக்கலாம். பறவைகளைப் பார்க்க உகந்த நேரமாக பகல் நேரம் சிறந்தது. குறிப்பாக நாம் பறவைகளை பார்க்கும்போது அவற்றை தொந்தரவு செய்யக்கூடாது. பறவைகளை போட்டோ எடுத்து லைக்குகாக அவற்றை தொந்தரவு செய்கிறோம் . அப்படி செய்யக்கூடாது.
வலசை வரும் பறவைகள் குறிப்பாக நார்த் போலிலிருந்து வருகின்றன.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
இனப்பெருக்கத்திற்காக வருவதில்லை :
உணவிற்காக மட்டுமே இங்கு வருகின்றன. அவைகள் இங்கு வந்து முட்டையிட்டு குஞ்சு பொரிப்பதாக கூறப்படுகிறது. அதுதான் இல்லை. இனப்பெருக்கத்திற்காக வருவதில்லை. மாறாக உணவிற்காக மட்டும்தான் இங்கு வருகின்றன. இந்த பறவைகள் தங்களின் நாடுகளுக்கு சென்று முட்டையிட்டு குஞ்சு பொரிக்கின்றன. பறவைகளை முதலில் நாம், அவுட் லைனாக வரைய வேண்டும். பின்னர் அதற்கு வண்ணங்களை தீட்ட வேண்டும். இதற்கு முதலில் நாம் பறவைகளை கூர்ந்து கவனிக்க வேண்டும் இதுதான் முதன்மையானது” என்று அவர் கூறினார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Tirunelveli