திருநெல்வேலி மாவட்ட சைபர் கிரைம் போலீசார் கல்லூரி மாணவிகளை நேரில் சந்தித்து சைபர் கிரைம் குற்றங்கள் குறித்து விழிப்புணர்வுஏற்படுத்தினர்.
திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரவணன் அறிவுறுத்தலின் பேரில் சைபர் கிரைம் குற்றங்களிலிருந்து மாணவ, மாணவியர்கள் எவ்வாறு தங்களைப் பாதுகாத்துக் கொள்வது என்பது குறித்தும் பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பு பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
இதன் அடிப்படையில் திருநெல்வேலி மாவட்டம், பொன்னாக்குடி, கண்டிதன்குளம் பகுதியில் நாட்டு நலப்பணிகளில் ஈடுபடும் (NSS) ரோஸ்மேரி மகளிர் கல்லூரி மாணவிகளுக்குமாவட்ட சைபர் கிரைம் உதவி ஆய்வாளர் இராஜரத்தினம், சைபர் கிரைம் குற்றம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
அப்போது, பெண்கள் சமூக வலைதளங்களில் தங்களது புகைப்படங்களை பதிவேற்றம் செய்வதால் ஏற்படும் விளைவுகள் பற்றியும், வங்கிக் கணக்குகளின் ரகசிய எண்களை யாரிடமும் பகிர்ந்து கொள்ளக் கூடாது என்றும், முகாந்திரம் தெரியாத நபர்களிடம் இருந்து வரும் குறுஞ்செய்தி மற்றும் வீடியோ அழைப்புகளை ஏற்க வேண்டாம் என்றும் வலியுறுத்தப்பட்டது.
மேலும் படிக்க: மாடித்தோட்டத்திலிருந்து இப்படி கூட வருமானம் பார்க்கலாமே.. அசத்தும் தென்காசி பட்டதாரி பெண்
இதேபோல, ஆன்லைன் வர்த்தக தளத்தில் பொருட்களை வாங்கும் போது, கவனமுடன் பொருட்களை வாங்க வேண்டும் என்றும், பரிசுப் பொருள்கள் விழுந்துள்ளதாக வரும் எந்த ஒரு அழைப்புக்கள் மற்றும் குறுஞ்செய்திகள், லிங்க்குகளுக்கும் பதில் அனுப்ப வேண்டாம்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
சைபர் கிரைம் குற்றங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய இலவச உதவி எண் 1930 மோசடி புகார்களுக்கு புகார் செய்ய வேண்டிய இணையதள முகவரி (http://cybercrime.gov.in) வழங்கியும், பெருகி வரும் சைபர்கிரைம் குற்றங்களிலிருந்து தங்களை எவ்வாறு பாதுகாத்துக் கொள்ள வேண்டும், சமூக வலைதளங்களை எவ்வாறு கையாள வேண்டும் என்பதை பற்றி எடுத்துக்கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Cyber crime, Local News, Tirunelveli