ஹோமியோபதியின் வளர்ச்சி :
ஹோமியோபதி மருத்துவம் பல கட்ட வளர்ச்சியை அடைந்து, இன்று உலகம் முழுவதும் வியந்து பார்க்க வைத்துள்ளது. ஆங்கில மருத்துவ முறைக்கு ஈடாக ஹோமியோபதி மருத்துவம் முறையும் நோயை குணமாக்கி வருகிறது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
ஹோமியோபதி தினம் :
இந்நிலையில், சாமுவேல் ஹானிமன் பிறந்த தினம் உலக ஹோமியோபதி மருத்துவ தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில், திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையை சேர்ந்த ஹோமியோபதி மருத்துவர் துரைராஜ் நம்மிடம் இந்த மருத்துவமுறை குறித்து பல்வேறு தகவல்களை பகிர்ந்து கொண்டார்.
எந்த பக்க விளைவும் கிடையாது :
இதுகுறித்து அவர் கூறுகையில், “ஹோமியோபதி முறையில் எந்தவித பக்க விளைவுகளும் கிடையாது. சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், சைனஸ், தைராய்டு, மூட்டு சம்பந்தப்பட்ட வியாதிகள் மற்றும் சரும நோய்களுக்கு மிகச்சிறந்த வைத்திய முறை ஹோமியோபதி. இது மட்டுமின்றி டான்சில், மூக்கில் சதை வளர்ச்சி, தைராய்டு சுரப்பி குறைபாடு, கண் புரை, மூலம், பவுத்திரம், கொழுப்பு, மார்பக கட்டிகள், பித்தப்பை கற்கள், ஆரம்ப நிலை கருப்பை கட்டிகள், நீர் கட்டிகள் மற்றும் குதிகால் வலி போன்ற வியாதிகளுக்கும் அறுவை சிகிச்சை இன்றி ஹோமியோபதி மருத்துவம் குணப்படுத்துகிறது.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
அறுவை சிகிச்சை இல்லை :
சிறுநீர்க்கல், பித்தப்பை கல் போன்ற நோய்களுக்கு அறுவை சிகிச்சை தான் தீர்வு என்ற நிலை உள்ளது, ஆனால், ஆரம்ப நிலையில் அறுவை சிகிச்சை இல்லாமல் ஹோமியோபதி சிகிச்சையில் சரி செய்து விடலாம். மேலும், தொடக்க நிலை சர்க்கரை நோயாளிகள் ஹோமியோபதி மருந்து எடுத்துக் கொள்ளலாம். பக்க விளைவுகள் வராது. அதேபோல் ரத்த அழுத்த நோயும் சரியாகிவிடும். இதேபோல் பல்வேறு நோய்களை ஹோமியோபதி மருத்துவ முறை மூலம் கட்டுக்குள் கொண்டு வரலாம்” என அவர் தெரிவித்தார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Health, Homeopathy, Lifestyle, Local News, Tirunelveli