திருநெல்வேலி அரசு அருங்காட்சியகத்தில் விடுமுறை கால பயிற்சி முகாம் நெல்லை அரசு அருங்காட்சியகத்தில் பள்ளி மாணவ, மாணவிகள் தங்களின் கோடை விடுமுறை காலத்தினை பயனுள்ள வகையில் கழிக்கும் விதமாக பல்வேறு பயிற்சி வகுப்புகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
நாளை (மே 8ம் தேதி) காலை 10 மணிக்கு இந்த பயிற்சி முகாம் துவங்க உள்ளது. இப்பயிற்சி முகாமில் ஓவிய பயிற்சி, கலை பயிற்சி, கழிவுகளில் இருந்து கலைப் பொருள்கள் தயாரிக்கும் பயிற்சி, களிமண்ணில் பொம்மைகள் செய்யும் பயிற்சி, காகிதக்கலை பயிற்சி, பேச்சுக்கலைப் பயிற்சி, எழுத்துக்கலைப் பயிற்சி, கதை சொல்லல் பயிற்சி, யோகா பயிற்சி, சிலம்பம் பயிற்சி என பல்வேறு பயிற்சிகள் நடைபெற உள்ளன.
தினமும் காலை 10 மணி முதல் மதியம் ஒரு மணி வரை இப்பயிற்சிகள் நடைபெறும். மே மாதம் 31ம் தேதி வரை இப்பயிற்சி முகாம் நடைபெறும். இப்பயிற்சி முகாமில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் 75024 33751 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என நெல்லை மாவட்ட காப்பாட்சியர் சிவ.சத்திய வள்ளி தனது செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Tirunelveli