முகப்பு /திருநெல்வேலி /

இரட்டை ரயில் பாதை பணிகள் நிறைவு.. நெல்லையில் அதிவேக ரயில் சோதனை ஓட்டம்..

இரட்டை ரயில் பாதை பணிகள் நிறைவு.. நெல்லையில் அதிவேக ரயில் சோதனை ஓட்டம்..

மாதிரி படம்

மாதிரி படம்

High Speed Train | திருநெல்வேலியில் இரட்டை ரயில் பாதையில் அதிவேக ரயில் சோதனை ஓட்டம் நடைபெற்றது.

  • Last Updated :
  • Tirunelveli, India

திருநெல்வேலியில் இரட்டை ரயில் பாதை பணிகள் முடிவடைந்துள்ள நிலையில் இந்த பாதையில் அதிவேக ரயில் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது.

நாங்குநேரி மேலப்பாளையம் இடையே இரட்டை ரயில் பாதையில் அதிவேக ரயில் சோதனை ஓட்டம் நடைபெற்றது. நெல்லை நாகர்கோயில் பகுதியில் திருவனந்தபுரம் கோட்டம் சார்பில் இரட்டை ரயில் பாதை பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில் ஆரல்வாய்மொழி முதல் நாங்குநேரி வரை இரட்டை ரயில் பாதையை அமைக்கப்பட்டு கடந்த 2 மாதங்களுக்கு முன்பு ரயில் போக்குவரத்து தொடங்கப்பட்டது.

மீதமுள்ள நாங்குநேரி-நெல்லை மற்றும் நாகர்கோவில்-ஆரல்வாய்மொழி இடையே இரட்டை ரயில் பாதை அமைக்கும் பணி நடைபெற்று வந்தது. இதில், நாங்குநேரிக்கும் மேலப்பாளையத்திற்கும் இடையே 24.5 கிலோமீட்டர் தூரம் முடிவடைந்தது. இதையடுத்து பெங்களூரு தெற்கு பகுதி ரயில்வே பாதுகாப்பு கமிஷனர் ஆனந்த மதுகர் சவுத்ரி நெல்லைக்கு வந்தார்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

அவர் மேலப்பாளையம் நாங்குநேரி இடையே புதிய ரயில் பாதையில் ட்ராலி மூலம் ஆய்வு செய்தார். இதனைத்தொடர்ந்து, மாலையில் நாங்குநேரியில் இருந்து மேலப்பாளையம் வரை அதிவேக ரயிலை இயக்கி சோதனை நடத்தினர்.

top videos
    First published:

    Tags: Local News, Southern railway, Tirunelveli