முகப்பு /திருநெல்வேலி /

ஹே.. எப்புட்றா.... கண்ணாடி பாட்டினுள் தேங்காய் ஓட்டில் செய்யப்பட்ட கைவினைப் பொருள்

ஹே.. எப்புட்றா.... கண்ணாடி பாட்டினுள் தேங்காய் ஓட்டில் செய்யப்பட்ட கைவினைப் பொருள்

X
தேங்காய்

தேங்காய் ஓட்டில் செய்யப்பட்ட கைவினைப் பொருள்

Tirunelveli | கண்ணாடி பாட்டினுள் தேங்காய் ஓட்டில் செய்யப்பட்ட கைவினைப் பொருள்களை வைத்து அசத்திவருகிறார் திருநெல்வேலி கலைஞர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tirunelveli, India

திருநெல்வேலியில் தேங்காய் ஓட்டினாலான கைவினைப் பொருட்களை செய்து அசத்தி வருகிறார் கிருஷ்ணசாமி. 67 வயதான கிருஷ்ணசாமி,தேங்காய் ஓட்டினாலான 300-க்கும் மேற்பட்ட கலைப் பொருட்களை செய்துள்ளார்.

10 வருடங்களாக தேங்காய் ஓட்டினாலான கைவினைப் பொருட்களை செய்து வரும் இவர் டூல் அண்ட் டை மேக்கர் படிப்பு படித்தவர். இவர் கைவினைப் பொருட்கள் செய்வதில் ஆர்வம் கொண்டவர். இவர் தனி ஆளாக, தேங்காய் ஓட்டினாலான கைவினைப் பொருட்கள் அனைத்தையும் செய்து அசத்தி வருகிறார்.

தொடக்கத்தில் தேங்காய் ஓட்டினாலான கைவினைப் பொருள்களை மட்டும் செய்த அவர்,பின்னர் பாட்டில் டெக்னாலஜி என்று அழைக்கப்படும் பாட்டில் உள்ளே கைவினைப் பொருட்களை செய்து பிரமிக்க வைத்துள்ளார். குறிப்பாக இவர் தேங்காய் சிரட்டையில் பெயர் எழுதி தருகிறார்.

பாட்டினுள் தேங்காய் ஓடு கலைப் பொருள்

தேங்காய் ஓட்டினாலான ரிக்ஷா, தேங்காய் உள்ளே தேங்காய் உள்ளிட்டவற்றை செய்து வருகிறார். மேலும் பாட்டில் டெக்னாலஜி என்று அழைக்கப்படும் பாட்டிலுள்ளசிறிய துளையின் உள்ளே சிரட்டையால் செய்யப்பட்டமாட்டு வண்டி, கடவுளின் சிலை உள்ளிட்ட ஏராளமான கைவினைப் பொருட்களை இவர் செய்துள்ளார்.

தேங்காய் ஓட்டில் செய்யப்பட்ட பொருள்

இது மட்டுமில்லாமல் தேங்காய் ஓட்டினாலான பொம்மைகள், இசைக் கருவிகளை வாசிப்பது போன்று தத்ரூபமாக செய்துள்ளார். அதேபோன்று தேங்காய் ஓட்டினாலான இசை கருவிகளையும் செய்துள்ளார். உபயோகம் இல்லாத பொருட்களை வைத்து அழகான கைவினைப் பொருட்களை செய்து வரும் கிருஷ்ணசாமி பேசும்போது, ‘இந்த கைவினைப் பொருட்கள் செய்வதினால் தன்னம்பிக்கையும் தற்சார்பும் அதிகரிக்கும். இதன் மூலம் நம்முடைய மற்ற செயல்களும் அதிகரிக்கும். சிரட்டையில் ஒரு துளையிட 10 நிமிடம் ஆகும்.

பின்னர் மிகச் சிறிய பிலேடை வைத்து கட் செய்ய வேண்டும். ஒரு கைவினைப் பொருட்களை செய்ய குறைந்தது ஒரு வாரம் ஆகும். விற்பனைக்காக இதனை நான் செய்யவில்லை. எனது விருப்பத்தின் பெயரில் செய்து வருகிறேன். இருப்பினும் யாராவது செய்து தரச் சொன்னால் செய்து கொடுப்பேன். அப்படி பலர் என்னிடம் நான் செய்த கைவினைப் பொருட்களை வாங்கிச் சென்றுள்ளனர்.

90'ஸ் கிட்ஸ் ஃபேவரைட் மரச்செப்பு விளையாட்டு பொருட்கள்- எப்படி செய்றாங்க தெரியுமா?

ஒவ்வொரு கைவினைப் பொருளும் குறைந்தது 1,000 ரூபாய்க்கும் கூடுதலாக இருக்கும்.கைவினைப் பொருட்களின் வேலைப்பாடுகள் வைத்து விலை சொல்லப்படும் என தெரிவித்தார். இவரை தொடர்புகொள்ள 8838144828 என்ற எண்ணில் அழைத்துப் பேசலாம்.

First published:

Tags: Local News, Tirunelveli