முகப்பு /திருநெல்வேலி /

கைத்தறியில் நெய்யப்படும் பட்டுப் புடவைகள் - எப்படி செய்றாங்க தெரியுமா?

கைத்தறியில் நெய்யப்படும் பட்டுப் புடவைகள் - எப்படி செய்றாங்க தெரியுமா?

X
கைத்

கைத் தறி பட்டுச் சேலைகள்

Tirunelveli | திருநெல்வேலி மாவட்டம் வீரவநல்லூரில் கைத்தறி மூலம் பட்டுப் புடவைகள், கோரைச் சேலைகள் கைத்தறி மூலம் நெய்யப்படுகின்றன.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tirunelveli, India

நெசவு தொழிலாளர்கள் குறைந்துவிட்டனர். எனவே எங்களை ஊக்கப்படுத்த வேண்டும். அரசு சிறப்பு சலுகைகள் வழங்கி நெசவு தொழிலை அழியாகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என நெசவுத் தொழிலாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இந்திய நெசவு தொழில் மிக தனித்துவமானது. 5,000 வருடங்களுக்கு முன்பு சிந்து சமவெளி காலக் கட்டத்திலிருந்தே நம் நெசவுத் தொழில் கைவினை கலைஞர்களின் படைப்பாற்றல் துணி நெய்தலில் வெளிப்பட்டிருக்கிறது. இந்தியாவின் ஒவ்வொரு பகுதிக்கும் ஒரு ஆடை வடிவமைப்பு, அதையொட்டிய கலாசாரம் என பரந்து விரிந்தது நமது நெசவு தொழில்நுட்பம்.

திருநெல்வேலி மாவட்டத்தில் இருக்கிற சின்ன ஊர்தான் வீரவநல்லூர். சௌராஷ்டிரா சமூகத்து மக்கள் வசிக்கிற பகுதி. ஒரு காலத்தில் பட்டு, கோரைச் சேலைகளுக்கு இந்த ஊர் பெரும் புகழ்பெற்றது. இது மாதிரி நெசவு கிராமங்கள் நம்ம மண்ணில் நிறைய இருக்கு. இதுல இந்த வீரவ நல்லூர் ரொம்பப் பழமையான கிராமம். இவங்க கைத்தறி முறையும் பழமையானது. இவங்க நெய்யிற துணி, ரொம்ப ரொம்ப உறுதியானதா, தரமானதா இருக்கும்.

கோரைச் சேலை

இந்தப் புடவைகளை அப்படியே விற்பதில்லை. பல்வேறு வேலைப்பாடுகளை இணைத்து, கவர்ச்சிகரமான டிசைனர் புடவை ஆக்கி விடுகிறார்கள். ‘‘அந்த டிசைனும் கூட பாரம்பரியக் கலைகளின் பங்களிப்பு தான். மெஷின் எம்பிராய்டரி, கம்ப்யூட்டர் டிசைனை விட தரமானது. எந்த கெமிக்கலும் இல்லாம செடிகள்ல இருந்து எடுத்த இயற்கை வண்ணங்களைத்தான் இதுல பயன்படுத்துறாங்க.

கைத்தறி பட்டு

இதுகுறித்து பேசிய நெசவாளி சுப்பிரமணியன், ‘முதலில் பாவு பூட்ட வேண்டும். காலை 7:00 மணி முதல் 9 மணி வரை ரோலில் பாவு சுத்தி, நெளிவு சுளிவுகளை சீர் செய்ய வேண்டும். இந்த பாவில் 55 நீளத்தில் ஆறு கஜத்தில் 10 சேலைகள் வரும். இதை செய்ய 15 நாட்கள் வரை ஆகும். இதற்கு 3,000 ரூபாய் முதல் 3,500 ரூபாய் வரை கிடைக்கும் என்றார்.

இரண்டாவது பாவு பூட்டியதை நெய்ய வேண்டும். விடுபட்ட நூலை பாவில் போட்டு துணி நெய்ய வேண்டும். ஜக்காடு, செடிபுட்டா டிசைன்களில் சேலைகள் நெய்யப்படுகின்றன. ஜக்கார்டு என்பது மெஷினில் செய்யப்படும் டிசைன் ஆகும். செடிபுட்டா கைகளால் செய்யப்படும் டிசைனாகும்.

தேனி பல்லவராயன்பட்டியில் களைக்கட்டிய ஜல்லிக்கட்டு.. எதிரெதிரே மோதிய காளைகள், வீரர்கள்!

மூன்றாவது நெய்யப்பட்ட துணிகள் சொசைட்டியில் வியாபாரம் செய்யப்படும். தற்போது நெசவு தொழிலாளர்கள் குறைந்துவிட்டனர். எனவே எங்களை ஊக்கப்படுத்த வேண்டும். அரசு சிறப்பு சலுகைகள் செய்து நெசவு தொழிலை அழியாகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என அவர் கோரிக்கை வைத்தார்.

First published:

Tags: Local News, Tirunelveli