திருநெல்வேலி மாவட்டம் டவுன் எஸ்.என்.ஹைரோட்டில் நெல்லை மாநகராட்சி பிரதான அலுவலகம் எதிரே கட்டப்பட்டு வரும் வர்த்தக மையம் பணி முடிவடையும் தருவாயில் உள்ளது. இந்நிலையில், நெல்லை வணிக வர்த்தக மைய வளாகத்தில வயதான பாட்டிகளின் காதை அலங்கரித்த பாம்படம் (தண்டட்டி) நினைவு சின்னமாக வைக்கப்பட்டுள்ளது.
இந்த நினைவுச்சின்னத்தை வைத்த நெல்லை மாநகராட்சி நிர்வாகத்தை பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், பாம்படம் அழகின் அடையாளம் அல்ல அந்தஸ்தின் அடையாளம். பாம்படங்களில் இருந்த மவுசு காரணமாக அதை வடிக்கவே சில பொற்கொல்லா்கள் பரம்பரை பரம்பரையாக இருந்தாா்கள்.
பாம்படங்கள் கொப்பு, முருக்கச்சி, ஓணப்பு தட்டு, எதிா்தட்டு, குறுக்கு தட்டு, தண்டட்டி, முடிச்சு, நாகவட்டம் போன்றவற்றை உடல் வாகுக்கு தக்கவாறும் காதின் உறுதிக்கும் ஏற்றவாறு அணிந்து வந்தனா்.
பாம்படம் தொங்கும் நீளத்தை வைத்து தான் செல்வ செழிப்பை அளப்பாா்கள். சிலருக்கு பாம்படம் தோள் வரை தொங்கும் சிலருக்கு மாா்பையும் வருடும். பாம்படம் போடுவதற்கு குறவா்கள் வந்து காதை, கத்தியால் கிழித்து துளை போட்டு காதை வடிப்பாா்கள்.
ஒவ்வொரு சமூகத்திற்கு ஒரு பாம்படங்கள் இருப்பதால் பாம்படங்களை வைத்து சமூகத்தை கணிப்பார்கள். இத்தகைய பெருமை வாய்ந்த அணிகலன்கள் தற்போது நமது பாட்டிகளின் காதை விட்டு தூரம் ஓடி விட்டது என் தெரிவித்தனர்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Tirunelveli