முகப்பு /திருநெல்வேலி /

நெல்லை அரசு இசை பள்ளியில் மாணவர் சேர்க்கை.. ஆட்சியர் கார்த்திகேயன் தகவல்!

நெல்லை அரசு இசை பள்ளியில் மாணவர் சேர்க்கை.. ஆட்சியர் கார்த்திகேயன் தகவல்!

மாதிரி படம்

மாதிரி படம்

Nellai music school | நெல்லை மாவட்ட அரசு இசை பள்ளி கடந்த 1997ஆம் ஆண்டில் தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டு துறை மூலம் தொடங்கப்பட்டு, பாளையங்கோட்டை அரசு அலுவலர் ஆ காலனியில் கலை பண்பாட்டு வளாகத்தில் செயல்பட்டு வருகிறது.

  • Last Updated :
  • Tirunelveli, India

நெல்லை அரசு இசை பள்ளியில் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது என மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் தகவல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் நெல்லை மாவட்ட அரசு இசை பள்ளி கடந்த 1997ஆம் ஆண்டில் தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டு துறை மூலம் தொடங்கப்பட்டு, பாளையங்கோட்டை அரசு அலுவலர் ஆ காலனியில் கலை பண்பாட்டு வளாகத்தில் செயல்பட்டு வருகிறது. இங்கு குரலிசை, நாதசுரம், தவில், தேவாரம், பரதநாட்டியம், வயலின் மற்றும் மிருதங்கம் ஆகிய கலைகள் கற்றுத்தரப்படுகிறது. இங்கு தற்போது மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.

3 ஆண்டுகள் முழு நேரமாக படிக்க வேண்டும். முதலாம் ஆண்டுக்கு ரூ.350 இரண்டாம் ஆண்டு மற்றும் மூன்றாம் ஆண்டு மாணவர்களுக்கு ரூ.325 சிறப்பு கட்டணம் ஆகும். நெல்லை மாவட்ட அரசு இசை பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள இலவச பஸ் வசதி, ரயில் கட்டண சலுகை வசதி, அரசு மாணவர் விடுதி வசதி, மாதந்தோறும் மாணவர்களுக்கு ரூ. 400 கல்வி உதவித்தொகை, இலவச சைக்கிள், இலவச காலணி ஆகியவை அரசு விதிமுறைகளுக்கு உட்பட்டு வழங்கப்பட்டு வருகிறது.

நெல்லை மாவட்ட அரசு இசை பள்ளியில் 3 ஆண்டு பயிற்சி முடிக்கும் மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசு தேர்வு இயக்ககத்தால் தேர்வுகள் நடத்தப்பட்டு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும். அதனை மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து பதிவு மூப்பு அடிப்படையில் இசை பள்ளிகளிலும், இந்து சமய அறநிலையத்துறைக்கு உட்பட்ட கோவில்களிலும் வேலை வாய்ப்பு அளிக்கப்படுகிறது.

மேலும் வளாக நேர்காணல் மூலம் தனியார் பள்ளிகளில் வேலை வாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது. மேலும் விவரங்களுக்கு 0462 2900926 மற்றும் 9443810926 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

First published:

Tags: Local News, Nellai