முகப்பு /செய்தி /திருநெல்வேலி / நெல்லையில் நர்ஸ் கொலை.. நடுரோட்டில் கணவனே பெட்ரோல் ஊற்றி எரித்துக்கொன்ற கொடூரம்

நெல்லையில் நர்ஸ் கொலை.. நடுரோட்டில் கணவனே பெட்ரோல் ஊற்றி எரித்துக்கொன்ற கொடூரம்

செவிலியரை கொலை செய்த நபர்

செவிலியரை கொலை செய்த நபர்

Tirunelveli Nurse Murder | நேற்று பணி முடித்து வீடு திரும்பிய அய்யம்மாளை வழி மறித்து, பாலசுப்பிரமணியன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

  • Last Updated :
  • Tirunelveli, India

நெல்லையில் அரசு மருத்துவமனை செவிலியரை, அவரது கணவரே கத்தியால் குத்தி, நடுரோட்டில் பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவில்பட்டி சங்கரலிங்கபுரம் கீழத் தெருவைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன். இவரது மனைவி அய்யம்மாள், நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்து வந்தார். இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக கணவரைப் பிரிந்த அய்யம்மாள், நெல்லை அண்ணாநகரில் வாடகை வீட்டில் வசித்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று பணி முடித்து வீடு திரும்பிய அய்யம்மாளை வழி மறித்து, பாலசுப்பிரமணியன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். ஒரு கட்டத்தில், மறைத்து வைத்திருந்த கத்தியால் மனைவியை சரமாரியாக குத்திய பாலசுப்பிரமணியன், மனைவி மீது பெட்ரோல் ஊற்றி தீப்பற்ற வைத்துள்ளார். இதில் அய்யம்மாள் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தார்.

இதையும் படிங்க: கத்திரி வெயில்... சூரியன் சுட்டெரிக்கப் போகுது... பாதுகாப்பா இருக்க இதை பண்ணுங்க..!

தகவலறிந்த வந்த காவல்துறையினர் உடலை மீட்டு உடற்கூராய்விற்காக அனுப்பி வைத்து விசாரணையைத் தொடங்கினர். இந்த நிலையில் தப்பியோடிய பாலசுப்பிரமணியன், கோவில்பட்டி காவல் நிலையத்தில் சரண் அடைந்துள்ளார். அவரை கைது செய்த காவல்துறையினர் கொலைக்கான காரணம் குறித்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

செய்தியாளர்: ஐயப்பன்

First published:

Tags: Crime News, Local News, Tirunelveli