முகப்பு /திருநெல்வேலி /

நெல்லை அரசு அருங்காட்சியகத்தில் பெண்களுக்கு கண்ணாடி ஓவியம் வரைதல் பயிற்சி..

நெல்லை அரசு அருங்காட்சியகத்தில் பெண்களுக்கு கண்ணாடி ஓவியம் வரைதல் பயிற்சி..

X
கண்ணாடி

கண்ணாடி ஓவியம்

Glass painting training : திருநெல்வேலி அரசு அருங்காட்சியகத்தில் பெண்களுக்கு கண்ணாடி ஓவியம் வரைதல் பயிற்சி.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tirunelveli, India

நெல்லை அரசு அருங்காட்சியகத்தில் பெண்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி நடைபெறும் என காப்பாட்சியர் சிவ. சத்தியவள்ளி அறிவித்தார். ஒவ்வொரு வாரமும் நெல்லை அரசு அருங்காட்சியகத்தில் பெண்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி நடைபெற்று வருகிறது. அதன்படி இந்த வாரமும் பெண்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி நடைபெற்றது. இந்த வாரம் கண்ணாடியில் ஓவியம் வரையும் பயிற்சி நடத்தப்பட்டது.

இப்பயிற்சியினை நெல்லை மாவட்ட காப்பாட்சியர் சிவ. சத்தியவள்ளி தொடங்கி வைத்தார். இப்பயிற்சியினை திருநெல்வேலி ஸ்டார் பயிற்சி மையத்தின் உரிமையாளர் ரஹமத் துனிஷா பேகம் நடத்தினார். கண்ணாடியில் அழகிய ஓவியங்கள் வரைதல் தொடர்பான பயிற்சியினையும் அதை கொண்டு வருமானம் ஈட்டும் திட்டங்களும் மகளிருக்கு எடுத்துரைக்க பட்டது. இப்ப பயிற்சியில் ஏராளமான பெண்கள் மிகவும் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

செய்தியாளர் : சந்தனகுமார் - திருநெல்வேலி

First published:

Tags: Local News, Tirunelveli