முகப்பு /திருநெல்வேலி /

கால்நடை வளர்ப்பு குறித்து திருநெல்வேலியில் திருநங்கைகளுக்கு இலவச பயிற்சி

கால்நடை வளர்ப்பு குறித்து திருநெல்வேலியில் திருநங்கைகளுக்கு இலவச பயிற்சி

X
திருநங்கைகளுக்கு

திருநங்கைகளுக்கு இலவச பயிற்சி

Tirunelveli District News | திருநெல்வேலி மாவட்டத்தில் திருநங்கைகளுக்கு கால்நடை வளர்ப்பு குறித்த இலவச பயிற்சி வழங்கப்படுகிறது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tirunelveli, India

திருநெல்வேலியில் திருநங்கைகளுக்கு இலவச கால்நடை வளர்ப்பு பயிற்சி நடைபெற்று வருகிறது. இப்பயிற்சி மார்ச் 31ம் தேதி வரை நடைபெறவுள்ளது.

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் வட்டார பகுதியில் உள்ள திருநங்கைகளுக்கு நபார்டு வங்கி உதவியுடன் கால்நடை வளர்ப்பு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட விழாவில், முன்னோடி வங்கி மேலாளர் கணேஷ் மணிகண்டன், நிதி சார் கல்வி ஆலோசகர் மகாலிங்கம், இந்தியன் வங்கி மேலாளர் ஜான் ஜோசப், நபார்டு வங்கி மேலாளர் சசிகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

திருநங்கைகளுக்கு இலவச பயிற்சி

அப்போது, நபார்டு வங்கி மேலாளர் சசிகுமார் பேசுகையில், “திருநங்கைகளுக்கான கால்நடை வளர்ப்பு பயிற்சியானது 15 நாள் பயிற்சியாகும். இந்த 15 நாட்களும் திருநங்கைகள் விடுமுறையின்றி தொடர்ந்து பயிற்சி பெற வேண்டும். பயிற்சியின் இறுதியில் சான்றிதழ் வழங்கப்படும். மேலும், இந்தியன் வங்கியில் கடன் உதவி பெற்று, கால்நடை வளர்ப்பு தொழில் செய்து திருநங்கைகள் நல்ல வருமானத்தை ஈட்டலாம்.

இதையும் படிங்க : சதுரகிரி மலையேற ரெடியா? வந்துவிட்டது வனத்துறை அறிவிப்பு

 இப்பயிற்சி முற்றிலும் இலவசமாக வழங்கப்படுகிறது. எனவே வள்ளியூர் வட்டார பகுதியில் உள்ள திருநங்கைகள் இதனை பயன்படுத்தி கொள்ள வேண்டும். இப்பயிற்சி மார்ச் 15ம் தேதி முதல் 31ம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் பயிற்றுநர் திருநங்கைகளுக்கு பல்வேறு விதமான பயிற்சி அளிக்க உள்ளனர். குறிப்பாக கோழி, ஆடு, பன்றி, மாடு உள்ளிட்டவற்றை வாங்குவது தொடர்பாக பயிற்சி கடன் வசதி செய்து கொடுப்பது தொடர்பான பயிற்சி, விலங்குகளுக்கு எவ்வாறு இடம் அமைக்க வேண்டும் நோய் வராமல் எப்படி பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்பது உள்ளிட்டவை தொடர்பான பயிற்சி அளிக்கப்படுகின்றன.

இதன் மூலம் எப்படி வருமானம் ஈட்ட வேண்டும் உள்ளிட்டவை தொடர்பான பயிற்சிகளும் அளிக்கப்பட இருப்பதாக தெரிவித்தார். இந்த பயிற்சியில் சேர்வதற்கான தகுதிகளாக, திருநங்கைகள் குறைந்தது 10ம் வகுப்பு முடித்திருக்க வேண்டும். மேலும் அவர்கள், திருநங்கைகள் என்று அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழை வைத்திருக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

First published:

Tags: Local News, Tirunelveli