முகப்பு /திருநெல்வேலி /

நெல்லையில் கோடை விடுமுறையை கழிக்க சூப்பர் திட்டம்.. மிஸ் பண்ணிடாதீங்க!

நெல்லையில் கோடை விடுமுறையை கழிக்க சூப்பர் திட்டம்.. மிஸ் பண்ணிடாதீங்க!

மாதிரி படம்

மாதிரி படம்

Tirunelveli summer classes | நெல்லையில் கோடை விடுமுறையை கழிக்க மாணவர்களுக்கு இலவச பயிற்சி முகாம் நடத்தப்படுகிறது.

  • Last Updated :
  • Tirunelveli, India

திருநெல்வேலி மாவட்ட அறிவியல் மையம்,  பள்ளி மாணவர்கள் கோடைகால விடுமுறையை பயனுள்ளதாக கழிக்கும் வகையில் கோடைகால அறிவியல் பயிற்சி முகாம் வரும் மே 1ம் தேதி முதல் 13ம் தேதி வரை நடத்த திட்டமிட்டுள்ளது.

இதில் மே 1 முதல் 6 ம் தேதி வரை மின்னணுவியல் (Electronics) என்ற பாடப் பிரிவில் VIII to XII std பயின்றவர்களுக்காக காலை 10:30 மணி முதல் மதியம் 1.00 மணி வரை நடைபெறவுள்ளது. மேலும் மே 8 - 13ம் தேதி வரை காலை 10:30 மணி முதல் மதியம் 12. 30 மணி வரை உயிர் அறிவியல் (Bioscience) எனும் பிரிவில் VII to XI std பயின்றவர்களுக்காகவும், மதியம் 1:30 மணி முதல் 03.30 மணி வரை STEM என்னும் பிரிவில் VI to VIII std பயின்றவர்களுக்காகவும்,மாலை 4:30 மணி முதல் 6:30 மணி வரை வானவியல் (Astronomy) என்ற பிரிவில் VII to XI பயின்றவர்களுக்கும் நடத்த திட்டமிட்டுள்ளது.

ஒரு நபர் ஒன்றுக்கு மேற்பட்ட பயிற்சி பிரிவுகளிலும் பங்கேற்கலாம். இதற்கான பயிற்சி கட்டணமாக ஒவ்வொரு பிரிவிற்கும் நபர் ஒன்றுக்கு Rs.600.00 மின்னணுவியலுக்கு Rs.800.00 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ALSO READ | நெல்லையில் சுட்டெரிக்கும் கோடை வெயில்.. பொதுமக்கள் கடும் அவதி!

ஒவ்வொரு பிரிவிற்கும் குறிப்பிட்ட இடங்களே அனுமதிக்கப்படுவதால் முதலில் வருபவருக்கு முன்னுரிமை வழங்கப்படும். பயிற்சி முடிவில் சான்றிதழ் அனைவருக்கும் வழங்கப்படும். இதற்கான விண்ணப்பங்களை அறிவியல் மையத்தில் பெற்றுக் கொள்ளலாம் மேலும் விவரங்கள் அறிய sciencentrenellaiednprog@gmail.com மற்றும் 94429 94797 என்ற  whatsapp எண்ணை அணுகவும் என அதன் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

top videos

    உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

    First published:

    Tags: Local News, Summer, Tirunelveli