திருநெல்வேலி அரசு அருங்காட்சியகத்தில் இலவச ஓலைச்சுவடி பாதுகாப்பு பயிலரங்கம் நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
காகிதங்களும் கணினிகளும் வருவதற்கு முன்னர் ஓலைச்சுவடிகள் தான் நமது முக்கியமான ஆவணப்படுத்தும் முறை. ஆனால் ஓலைச்சுவடிகள் நிரந்தரமானவை அல்ல. தாவர பொருட்களால் ஆன அவை அதிகபட்சம் இரு நூற்றாண்டுகள் தாக்கு பிடிக்கும் என்கின்றனர். அதற்கு பின்னர் அவற்றை படி எடுக்க வேண்டும் என்றும் சொல்லப்படுகிறது.
மேலும் பூச்சிகள், வெப்பம், ஈரப்பதம் ஆகியவற்றால் பாதிக்கப்படாமல் பாதுகாக்க வேண்டும். மன்னராட்சி காலத்தில் அரசே இந்த பணிகளை எடுத்து நடத்தும். அதன் மூலமே பல அறிய இலக்கண இலக்கியங்கள் பாதுகாக்கப்பட்டு வந்தன. அப்படி ஓலைச்சுவடிகள் அறிவியல் மூலமாக பேணப்படும் இடம்தான் அருங்காட்சியகங்கள்.
அத்துணை சிறப்பு வாய்ந்த ஓலைச்சுவடிகள் பற்றியும், சித்த மருத்துவர் ஓலைச்சுவடிகளை பாதுகாப்பதில் நவீன தொழில்நுட்பத்தின் பங்கு, நவீன முறையில் ஓலைச்சுவடிகளை பாதுகாத்தல் பற்றியும் அருங்காட்சியகத்தில் ஓலைச்சுவடிகள் பாதுகாக்கும் இயற்கை மற்றும் வேதியியல் முறைகள் பற்றியும், இன்றைய தலைமுறையினர் அறிந்து கொள்ளும் விதமாக சிறந்த வல்லுனர்கள் கொண்டு நெல்லை அரசு அருங்காட்சியகத்தில் மார்ச் 30 மற்றும் 31 ஆகிய இரு தினங்களும் ஓலைச்சுவடி பாதுகாப்பு பயிலரங்கம் நடைபெற உள்ளது.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
இப்பயிலரங்கில் கல்லூரி மாணவ மாணவிகள் மற்றும் விருப்பமுள்ள பொதுமக்கள் கலந்து கொள்ளலாம் .பயிற்சி பட்டறையில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்படும்.
இப்பயிற்சியில் கலந்து கொள்வதற்கு கண்டிப்பாக தங்களின் பெயர்களை 29/ 3 /2023 அன்று மாலை 5 மணிக்குள் முன்பதிவு செய்ய வேண்டும். பயிலரங்கம் பற்றி இதர விவரங்கள் மற்றும் முன்பதிவிற்கு செய்வதற்கு 75024 33751 என்கிற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என நெல்லை மாவட்ட காப்பாட்சியர் சிவ. சத்திய வள்ளி தனது செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Tirunelveli