முகப்பு /திருநெல்வேலி /

கட்டணம் இல்லா ஆங்கில வழிக்கல்வி.. நெல்லை அரசு பள்ளிகளில் சேர்க்க ஆர்வம் காட்டும் பெற்றோர்..

கட்டணம் இல்லா ஆங்கில வழிக்கல்வி.. நெல்லை அரசு பள்ளிகளில் சேர்க்க ஆர்வம் காட்டும் பெற்றோர்..

X
கட்டணம்

கட்டணம் இல்லா ஆங்கில வழி கல்வி சேர்க்கை

Free English Medium Education Admission in Nellai | திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அரசு தொடக்கநிலைப் பள்ளிகளில் முன்பெல்லாம் மாணவர்கள் சேர்க்கை பள்ளி திறந்த பின்பு நடைபெறும்.

  • Last Updated :
  • Tirunelveli, India

திருநெல்வேலி மாவட்ட அரசு பள்ளிகளில் கட்டணம் இல்லா ஆங்கில வழிக்கல்வியில் தங்களது குழந்தைகளை சேர்க்க பெற்றோர் ஆர்வம் காட்டுகின்றனர்.

அரசு பள்ளிகளின் கல்வித்தரத்தை உயர்த்தவும், அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் கல்வித்திறனை ஊக்குவிக்கவும் தமிழக அரசு பல்வேறு புதிய கல்வி திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறது. 2 ஆண்டுகள் கொரோனாவுக்கு பின்னர் கடந்த கல்வியாண்டில் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டன. இந்நிலையில் மாணவர்கள் கல்வி கற்க அடிப்படை சிக்கல்களை சந்திப்பது தெரியவந்தது. இதையடுத்து இல்லம் தேடி கல்வித் திட்டம் என்னும் எழுத்தும் கல்வி போன்ற திட்டங்களை அறிவித்தன.

அரசு பள்ளிகளில் மாணவிகள் அதிகளவு சேர்ந்து பயில்வதை ஊக்குவிப்பதற்கு அரசு பள்ளியில் பயின்று கல்லூரி கல்வியை தொடரும்போது அவர்களுக்கு மாதம் ஆயிரம் வழங்கும் புதுமைப்பெண் திட்டமும் கடந்த கல்வியாண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் மூலம் பள்ளி படிப்பை முடித்து கல்லூரியில் பயிலும் மாணவிகளுக்கு பயன் அளிப்பதாக தெரிகிறது. காலை உணவு திட்டமும் படிப்படியாக அறிமுகம் செய்யப்படுகிறது. இதுபோன்ற நடவடிக்கைகளால் அரசு பள்ளிகளில் தங்கள் குழந்தைகளை சேர்க்க பெற்றோர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இதையும் படிங்க : இரவில் வாரத்துக்கு ஒரு நாள் மட்டும் நடக்கும் ஈரோடு ஜவுளி சந்தை பற்றி தெரியுமா?

கட்டணம் இல்லா ஆங்கில வழி கல்வி சேர்க்கை

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அரசு தொடக்கநிலைப் பள்ளிகளில் முன்பெல்லாம் மாணவர்கள் சேர்க்கை பள்ளி திறந்த பின்பு நடைபெறும். அதாவது பள்ளி திறந்த பிறகு தான் தங்கள் குழந்தைகளை பெற்றோர்கள் பள்ளிக்கு அழைத்து சென்று சேர்ப்பார்கள். தற்போது ஆங்கில வழி கல்வி மக்கள் மத்தியில் வரவேற்பு பெற்றுள்ளது. இதன் காரணமாக பள்ளி திறப்பதற்கு 15 நாட்களுக்கு முன்னதாகவே அரசு தொடக்கநிலை பள்ளிகளில் தங்கள் குழந்தைகளை சேர்ப்பதற்கு பெற்றோர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

top videos

    அரசு தொடக்கப் பள்ளிகளில் முன்பை விட மாணவர்கள் சேர்க்கையும் கல்வித் தரமும் உயர்ந்துள்ளதாக தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் மாநில செயலாளர் நல்லாசிரியர் ராஜேந்திரன் தெரிவித்தார்.

    First published:

    Tags: Local News, Tirunelveli