முகப்பு /திருநெல்வேலி /

போட்டி தேர்வுக்கு தயாராகுறீங்களா? நெல்லையில் இலவச பயிற்சி.. மிஸ் பண்ணிடாதீங்க!

போட்டி தேர்வுக்கு தயாராகுறீங்களா? நெல்லையில் இலவச பயிற்சி.. மிஸ் பண்ணிடாதீங்க!

மாதிரி படம்

மாதிரி படம்

Nellai free coaching | நெல்லையில் நடைபெறும் இலவச பயிற்சி முகாமில் பயனாளர்கள் கலந்து கொண்டு பயன்பெற வேண்டும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

  • Last Updated :
  • Tirunelveli, India

மத்திய அரசு ரயில்வே மற்றும் வங்கி போட்டி தேர்வுகளுக்கு கட்டணமில்லா பயிற்சி வகுப்பு தொடங்கப்பட்டுள்ளது.

இது குறித்து மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தமிழ்நாடு அரசின் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் திருநெல்வேலி மாவட்டத்தில் மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் ரயில்வே தேர்வு குழுமம் மற்றும் வங்கி தேர்வு குழுமம் நடத்தும் போட்டி தேர்வுகளில் தமிழ்நாட்டைச் சேர்ந்த போட்டி தேர்வர்கள் பெருமளவில் பங்கு கொண்டு வெற்றி பெறும் நோக்கில் ஒருங்கிணைந்த கட்டணமில்லா பயிற்சி வகுப்பு பாளையங்கோட்டையில் உள்ள மாவட்ட மையம் நூலகத்தில் மே 25 அன்று தொடங்கப்பட உள்ளது.

இந்த பயிற்சி வகுப்புகள் 100 நாட்களுக்கு 300 மணி நேரங்களுக்கு நடைபெறும் போட்டி தேர்வு துறையில் நிபுணத்துவம் பெற்ற பயிற்சிநர்களை கொண்டு இவ்வகுப்புகள் நடத்தப்பட உள்ளது.

பயிற்சிக்கான பாட நூல்கள் மற்றும் கையேடுகள் இலவசமாக வழங்கப்படுகிறது. 120 பயிற்சி தேர்வுகளும் நடத்தப்பட உள்ளது. இப்பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள விருப்பம் உள்ள மாணவர்கள் bit.ly/naanmudhalvanexams என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டியது அவசியமாகும். விண்ணப்ப கட்டணம் எதுவும் இல்லை மேற்படி குறிப்பிடப்பட்டுள்ள இணைய முகவரி Nellai employment office என்ற டெலிகிராம் சேனலில் பகிரப்பட்டுள்ளதுவிண்ணப்பிக்க கடைசி நாள் மே 20ஆம் தேதி ஆகும்.

ALSO READ | பிற்படுத்தப்பட்டோர் கடன் பெற விண்ணப்பிக்கலாம் - நெல்லை ஆட்சியர் தகவல்!

இணையவழியில் விண்ணப்பிக்க இயலாதவர்கள் 17 சி சிதம்பரம் நகர் பெருமாள்புரம் சி காலனியில் அமைந்துள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தை நேரில் அணுகலாம் மேலும் விவரங்களுக்கு 04622532938 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ளுமாறு திருநெல்வேலி மாவட்ட ஆட்சித் தலைவர்தெரிவித்துள்ளார்.

top videos

    உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

    First published:

    Tags: Competitive Exams, Local News, Nellai