முகப்பு /திருநெல்வேலி /

காவல் உதவி ஆய்வாளர் தேர்வுக்கு நெல்லையில் இலவச பயிற்சி வகுப்பு..

காவல் உதவி ஆய்வாளர் தேர்வுக்கு நெல்லையில் இலவச பயிற்சி வகுப்பு..

மாதிரி படம்

மாதிரி படம்

Police Sub Inspector Recruitment 2023 : காவல் உதவி ஆய்வாளர் தேர்வுக்கு நெல்லையில் இலவச பயிற்சி வகுப்பு நடைபெறுகிறது.

  • Last Updated :
  • Tirunelveli, India

திருநெல்வேலியில் காவல் உதவி ஆய்வாளர் தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடைபெறுகிறது.

இதுகுறித்து நெல்லை மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், “திருநெல்வேலி மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் நடத்தும் உதவி காவல் ஆய்வாளர் தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு இன்று (மே 8ம் தேதி) முதல் தொடங்குகிறது. இந்த பயிற்சி வகுப்புகள் அனுபவம் வாய்ந்த பயிற்றுனர்களை கொண்டு நடத்தப்பட உள்ளது.

மேலும் வாரம்தோறும் மாதிரி தேர்வுகளும் நடத்தப்பட உள்ளன. இதில் பங்கேற்க விரும்புவோர் தங்களது பாஸ்போர்ட் அளவு புகைப்படத்துடன் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு நேரில் வருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும் விவரங்களுக்கு 0462 2532938 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்” என மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

top videos
    First published:

    Tags: Local News, Police SI, Tirunelveli