முகப்பு /திருநெல்வேலி /

மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச பஸ் பாஸ் வழங்கும் முகாம் - நெல்லை கலெக்டர் முக்கிய அறிவிப்பு

மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச பஸ் பாஸ் வழங்கும் முகாம் - நெல்லை கலெக்டர் முக்கிய அறிவிப்பு

மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச பஸ் பாஸ்

மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச பஸ் பாஸ்

மாற்றுத்திறனாளிகளுக்கான இலவச பேருந்து பயண அட்டை தொடர்பாக திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

  • Last Updated :
  • Tirunelveli, India

திருநெல்வேலியில், மாற்றுத்திறனாளிகளுக்கான இலவச பேருந்து பயண அட்டை புதுப்பிக்க மார்ச் 30 மற்றும் 31 தேதியில் முகாம் நடைபெற உள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், திருநெல்வேலி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தின் மூலம் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச பேருந்து பயண அட்டை வழங்கும் திட்டத்தின் கீழ் ஏற்கனவே பயன் பெற்று வரும் பயனாளிகளுக்கு இலவச பேருந்து பயண அட்டைகளை புதுப்பித்து வழங்கப்படுகிறது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

மேலும், புதிய அட்டை வழங்கிடவும் போக்குவரத்து கழகத்துடன் இணைந்து வரும் மார்ச் 30 மற்றும் 31 ஆம் ஆகிய தேதிகளில் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை பார்வையற்றோர் மேல்நிலைப்பள்ளி பாளையங்கோட்டையில்  முகாம் நடைபெறுகிறது.

இந்தமுகாமில் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் உரிய விண்ணப்பத்துடன் மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை நகல், ஆதார் அட்டை நகல், யுடிஐடி அட்டை நகல், பாஸ்போர்ட் அளவு புகைப்படம் மூன்று மற்றும் கடந்த வருடத்தில் அரசு போக்குவரத்து கழகம் மூலம் வழங்கப்பட்ட இலவச பேருந்து அட்டையுடன் விண்ணப்பித்து பழைய அட்டையினை புதுப்பித்தல் மற்றும் புதிய இலவச பேருந்து பயண அட்டை பெற்று பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

top videos
    First published:

    Tags: Local News, Tirunelveli